Trending

Monday 14 July 2014

நகர பார்பி பொம்மைகள்

நகரத்து பெண்கள் கணவனை வாடா போடா என்பதில் ஆளுமை காண்கிறாள்.. கிராமத்து பெண்கள் பிறர தன் கணவனை வாடா போடா என்று பேசவிடாமல் மரியாதை சேர்ப்பதில் ஆளுமை காண்கிறாள்..

நகரத்து பெண்கள் சேமிப்பற்ற வாழ்க்கைமுறை நோக்கி பறந்துகொண்டிருப்பவர்கள்.. கிராமத்து பெண்கள் சேமிப்பால் நாட்டையும் வீட்டையும் காப்பவர்கள்..


நகரத்து பெண்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் முதல் குறி.. கிராமத்து பெண்கள் பொருளாதாரத்தின் கவசம்..

நகரத்து பெண்கள் கோணல் ஊடகங்களின் செய்திகள் (ingredient& composition) அப்படியே நம்பிஇருப்போர். ஏவுவதற்கு எளிமையான அம்புகள்.. கிராமத்து பெண்கள் உலக சூழலில் ஏற்படும் மாற்றங்களை உள்வாங்கி அதற்கேற்றவாறு வீட்டையும் ஊரையும் வழிநடத்தும் தேரோட்டிகள்..

நகர பெண்களின் அலங்கார பட்ஜெட் தனி.. கிராம பெண்களின் ஆபரண செலவு கூட ஒரு முதலீடுதான்..

நகர பெண்கள் மனிதர்களோடு ஒட்டாத டிஜிட்டல் பார்பி டால்கள்.. கிராமத்து பெண்கள் ஊரே உறவாக-குடும்பமாக இருப்பதால் அனைவரையும் விசாரித்து புரளி பேசும் மைக்செட்கள்தான்..

நகர பெண்கள்-தனிமனிதத்துவத்தில் ஊறி ஒடுங்கியவர்கள்-முற்போக்கு மாபியாவின் அட்டாக் பாய்ன்ட்கள்.. கிராம பெண்கள்-சமூக வாழ்க்கைமுறைக்கு விதையாக இருப்பவர்கள்.. 

நேற்றைய கிராமத்து பெண்கள்-இன்றைய கிராமத்து தெய்வங்கள் 
கிரிமினல்களுக்கும் வாழ்க்கை-குடும்ப பற்று ஊட்டி மனிதனாக்கி காட்டியுள்ளார்கள் கிராமத்து பெண்கள்..

நகர பெண்களிடம், சுத்தமான காற்று, நல்ல தண்ணீர், செடிகள்-மரங்கள்.. வயல் வரப்புகள், நாட்டுபசுக்கள், ஏறி, குளம், ஆறு, மலைகள், அழுத்தமற்ற-அவசரமற்ற வாழ்வு இவையெல்லாம் உண்டா என்று ஏன் கேட்கவில்லை..? இவற்றை நகரத்து பெண்களை பெஞ்ச்மார்க் செய்து கிராம பெண்களை அவர்களோடு 'இணையாக' ஒப்பிட்டு மனதில் விஷத்தை விதைக்கும் சூட்சும வேலைகள் யாருக்கு ஏவல் செய்ய..??
(ஒரு அறிஞர், நகரங்களை Urban Economic Brothel என்று சொன்னது நினைவுக்கு வந்து தொலைக்கிறது)


No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates