Trending

Monday 28 July 2014

ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டியவை

ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டியவை
- நல்லதம்பி காங்கேயன்



1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.

2. போகும்போதோ, வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம்.

3. கோயிலுக்கு போவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு சமையல்கட்டை பசுஞ்சாணமிட்டு மெழுக வேண்டும்.

4. கோயிலை விட்டுவரும் போது யாருக்கும் பிச்சையிட்டால் கோயிலுக்கு போய் வந்த புண்ணியபலன் அனைத்தும் பிச்சையிடும் காசுடன் பிச்சை வாங்குபவர்க்கு போகும்.

5. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி 7 நாட்கள் கழித்துச் செல்வது நல்லது.

6. தர்ப்பணம்/பித்ருகடன் செய்யாதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.

7. ஆலயத்திற்குள் யாருடனும் பேச வேண்டாம். செல்போன்களைத் தவிர்க்கவும்.

8. திரை போட்ட பின் பிரதட்சணம் வர வேண்டாம்.

9. பசுவிற்கும், அந்தணருக்கும் நடுவிலும், அந்தணர் அக்னியின் நடுவிலும், தம்பதிகளின் நடுவிலும், தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், குரு சிஷ்யரின் நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது.

10. கோயிலுக்குள் திருமணங்கள் செய்யகூடாது. இது கோயிலுள் இருக்கும் இறைவனை நிந்தனை செய்வதாகும். தெய்வநிந்தனை செய்த பாவம் திருமணதம்பதிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்களையும் சாடும். கோயிலுக்குள், குருக்களைகூட நமஸ்காரம் செய்யக்கூடாது. இறைவனை மட்டுமே தொழவேண்டும்.
11. ஒரு பிரதட்சணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து கைகூப்பி விழுந்து வணங்க வேண்டும். கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக் கூடாது.

12. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம். நெய் அல்லது எண்ணையை பிற விளக்குகளில ஊற்ற வேண்டாம்.

13. கோயிலில் கண்டிப்பாக பசுமாடு இருக்க வேண்டும்.

14. வேகமாக ப்ரதட்சணம் வராமல் பொறுமையாக நமச்சிவாய என்ற 5 எழுந்து மந்திரத்தை உச்சரித்தபடி பொறுமையாக வருவது நல்லது.

15. பலன் முழுமையாகப் பெற 1 வருஷ காலம் வரை ஆகலாம். நமக்கு 1 வருஷம் என்பது ஆண்டவனுக்கு 1 நாள்.

16. ஒரு கையில் விபூதி குங்குமம் வாங்கக்கூடாது. இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து பௌயமாக பெற்றுக் கொள்ள வேண்டும். விபூதி, குங்குமத்தை பேப்பரில் வாங்ககூடாது. பெற்ற விபூதி குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும்.

17. விபூதியை நிமிர்ந்து நின்று அப்படியே பூசிக் கொள்ளவும். இடது கையில் வைக்க வேண்டும்.

18. எண்ணையை விட நெய்க்கு வீரியம் மிக அதிகம். ஆனால், நெய் என்பது வீட்டில் நாம் தயாரிக்கும் நெய்யே நெய். மற்றதெல்லாம் பொய். கலப்படம். முடிந்த அளவு வீட்டில் அதுவும் நாட்டு மாட்டு நெய் கொண்டு விளக்கிடுவது மிகுத்த பலனைத்தரும்.

19. வாழைப்பழத்தில் பூவம் பழம் உயர்ந்தது. அடுத்து நாட்டுப்பழம்.

20. ஆலயத் தூய்மை ஆலய தரிசனத்தை விட முக்கியமானது. ஆலயத்தை சுத்தம் செய்வதும், சுவாமிக்கு பூஜை செய்வதும் ஒரே பலனை கொடுக்கும்.

21. கோபுர தரிசனம் கோடி நன்மை. கோபுர நிழலை, சிலைகளது நிழலை மிதிக்ககூடாது.

22. பூஜைகள் காரியசித்தி பூஜைகள் தானே தவிர கர்ம வினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும்.

23. இயன்றவரை இறைவனைப் பற்றிய சிந்தனையிலேயே இருங்கள்.

24. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது.

25. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.

26. வஸ்திரத்தை போர்த்திக் கொண்டு ஜபம், பிரதக்ஷிணம், நமஸ்காரம், பூஜை, ஹோமம் செய்யக்கூடாது.

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates