Trending

Wednesday 30 July 2014

புத்தகத் திருவிழா

புத்தக திருவிழா.. அடடே.. நல்ல முயற்சிதானே என்று தோன்றும்.. வெளிப்படையாக நல்ல முயற்சிதான்; அதன் உள்ளார்ந்த நோக்கம்? ஆனால் இதற்குள் இருக்கும் சில சூதுகளையும் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா..?


ஈரோடு புத்தக திருவிழா நடத்துபவர் ஸ்டாலின் குணசேகரன். அடிப்படையில் இவர் ஒரு கம்யூனிஸ்ட். முதலில் கம்யூனிஸ்ட்கள் மற்றும் கம்யூனிசமும இந்திய பாரம்பரியம், கலாசாரம், மரபுகளுக்கு எதிரான பல கருத்துக்களை கொண்டதாகும். அதனால்தான் பொதுவுடைமை எளிய மனிதர்களுக்கு உதவுகிறோம் என்று எவ்வளவு வேஷம் போட்டாலும் பொதுமக்கள் அவர்களை கிட்டே நெருங்க விடுவதில்லை. இந்திய விடுதலை போராட்ட காலம் முதலே விடுதலை போராட்ட தியாகிகளை காட்டிக்கொடுத்தது முதல், சீன போர் தொடர்ந்து இன்றுவரை கம்யூனிஸ்ட்களுக்கு இந்திய தேசப்பற்றை விட ரஷ்ய சீன பற்று அதிகம் என்பதை நிரூபித்து வந்துள்ளனர்.



(கம்யூனிஸ்ட்களின் உண்மை முகம் பற்றி அறிய ஒரு சிறு நூல் இ-புத்தகமாக இருக்கிறது. வேண்டுவோர், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.)

இந்த கம்யூனிஸ்ட்கள் ஒரு தேசத்தை தங்களுக்கேற்றவாறு மூளைச்சலவை செய்ய முதலில் எழுத்துலகை, சினிமா-மீடியாவை, சமூக ஆய்வுலகத்தை கைப்பற்றும். சமூகத்துக்குள் குழப்பம் ஏற்ப்படுத்தி பிரிவினைகளை வளர்த்து பின் தங்களுக்கேற்றவாறு சிறிது சிறிதாக மாற்றுவார்கள். இதை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் என்றோ எழுதியுள்ளார். எழுத்தாளர்களோ, பதிப்பகத்தாரோ கம்யூனிச லாபியி தாண்டி எதுவும் செய்ய முடியாத சூழலில் இருக்கிறார்கள். அதை பற்றிய உண்மைகளை ரஷ்ய உளவுப்பிரிவில் வேலை செய்த உலவாளியும், இந்திய மரபியலில் டாக்டர் பட்டம் பெற்றவருமான அலுவலர் வெளிப்படையாக கூறும் வீடியோ பதிவு கீழே.



· கம்யூனிசம், திராவிடம், முற்போக்கு இயக்கங்கள் நேரேடி கட்டுப்பாட்டில் இருக்கும் பிரஸ்களுக்கும், கம்யூனிச கொள்கைகளை பின்பற்றும்-பரப்பும் எழுத்தாளர்கள் புத்தகங்களை விற்கும் பப்ளிகேசன்களுக்கும் முன்னுரிமையும், மக்கள் கண்ணில் உடனே படுவது போல இடமளிப்பும் கொடுக்கபடுகிறது. இருக்கும் மொத்த ஸ்டால்களில் இவர்கள் ஸ்டால் அதிகம் இருக்கும்.

· இந்திய பாரம்பரியம், கலாசாரம் போன்றவற்றை வலியுறுத்தும் பப்ளிகேசன்களுக்கும், கம்யூனிச முற்போக்கு சக்திகளுக்கு எதிரான கொள்கையுடைய பப்ளிகேசன்களுக்கும் இடமளிப்பதில் பாகுபாடு காட்டப்படுகிறது.

·     இதே ஸ்டாலின் குணசேகரன், தனது நூல் ஒன்றில் காளிங்கராயன் சாதி கொடுமைகள் நிறைந்த அந்த காலத்திலேயே பிற சாதிகளுக்கு உரிமைகள் கொடுத்தார் என்று கம்யூனிச விஷத்தில் சாதி அபிமான சக்கரையை தடவி கொடுக்கப் பார்த்தார். அதாவது அந்த காலத்தில் எல்லா மக்களும் சாதி வெறியர்களாம்; அதை இவர் விளக்கு பிடிச்சு பார்த்தாராம்; அதில் காளிங்கராயன் மட்டும் சாதிவேற்றுமையை ஒழிக்க உண்டி குலுக்கிக்கொண்டு உரிமைகள் கொடுக்க வந்தாராம். இதை கேட்டு உள்ளூர் கவுண்டர்கள் எல்லாம் ஸ்டாலின் குணசேகரனிடம் ஒட்டிக்கொள்வார்கலாம். கால்வாய் வெட்டிய தன்னலமற்ற காலிங்கராயனுக்கும் கம்யூனிச கறையை பூசப் பார்க்கும் சூழ்ச்சி.ஏன் இவருக்கு தெரியாதா, அக்காலத்தில் நல்ல செயல்கள் செய்தால் அவர்களுக்கு உறிமைகள் கொடுப்பது அந்தந்த பட்டக்காரர்கள் என்று? இதே போல பல்வேறு சாதியினருக்கும் பல்வேறு பட்டக்காரர்கள் பல்வேறு காலகட்டங்களில் உரிமைகள் கொடுத்துள்ளனர். அக்காலத்தில் எல்லா சாதியினரும் அவரவர் மரபை-கலாசாரத்தை உணர்ந்து இணக்கமாக வாழ்ந்து வந்தனர். வெள்ளையர்களும் கம்யூனிசமும் வரும் வரை ஊரும நாடும் உருப்படியாக இருந்தது என்பதை வரலாறு படித்தவர்கள் உணர்வார்கள்.

·  பேச அழைக்கப்படும் சிறப்பு பேச்சாளர்களிடமும் இந்த பாகுபாடு நிச்சயம் உண்டு. கம்யூனிச கொள்கைகளுக்கு மாற்று கருத்துள்ளவர்களை பேச அழைக்கமாட்டார்கள், கூப்பிடவும் மாட்டார்கள். அப்படியே அழைக்கப்பட்டாலும் மீண்டுமொருமுறை வர மாட்டார்கள் என்னும் சூழல் உருவாக்கப்படும்.

·    போன வருஷம் புத்தக திருவிழாவில் நம்மாழ்வார் பேச வந்தபோது அவரை ஈரோடு தோல் சாய விஷம் பிரச்னை குறித்தோ, பவானி வாய்க்கால் கான்கிரீட் பிரச்னை குறித்தோ பேசக்கூடாது என்று சொல்லிவிட்டார். என்ன காரணம்?


இந்த சூழ்ச்சியின் வெளிப்பாடுதான் புத்தக திருவிழாவுமாகும். ஈரோடு போன்ற நகரங்களில் கம்யூனிச முற்போக்கு கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க, புத்தகங்களை ஆயுதமாக பயன்படுத்த மேற்கொள்ளுகிறார்கள். நீங்கள் புத்தக திருவிழாவுக்கு போவதாக இருந்தால், என்ன புத்தகத்தை வாங்குகிறீர்கள், அதை யார் எழுதியது, எழுதியவன் பின்னணி என்ன? பதிப்பகத்தார் பின்னணி என்ன? போன்றவற்றை உணர்ந்து வாங்குங்கள். இல்லையேல் நீங்களும்/உங்கள் குழந்தைகளும் உங்களை அறியாமல் மூளைச்சலவை செய்யப்படுவீர்கள். 

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates