Trending

Tuesday 7 October 2014

பெரியோர் ஆசி

நாலு கிலோமீட்டர் சைக்கிள் மிதித்துவந்து, சரஸ்வதி பூஜை-விஜயதசமிக்காக எண்பத்தைந்து வயதான தாய் மாமனிடம் ஆசி வாங்கும் எழுபது வயது மருமகன். பெரியவர்களை மதிப்பதும் வணங்குவதும் ஒரு பாக்கியம். பெரியவர்களை மதிப்பதை, நான் யார் காலிலும் விழ மாட்டேன் என்ற மனநோயாக என்னவோ சுயமரியாதையின் அடையாளம் என்று வளர்துள்ளார்கள்.. தன் சொந்த பாட்டன், மாமன், வாழ்வாங்கு வாழ்ந்த குடும்ப-ஊர் பெரியவர்கள் ஆசி பெறத் தயங்கியவன், குடியை கெடுக்கும் தெள்ளவாரித்தனம் செய்யும் அரசியல்வாதி காலில் விழுவான்.







மகாபாரதம் ராமாயணம் முதற்கொண்டு நம் மங்கள வாழ்த்து பாடல் வரை பெரியவர்களிடம் ஆசி பெறுவதன் அவசியம் வலியுறுத்தப் பட்டிருக்கும். பெரியவர்கள் அனுபவத்தின் பொக்கிஷம். பெரியவர்களின் மனம் புண்படும்படி பேசுவதே ஒரு தோஷம். பிதுர் தோஷம என்று இன்று நாம் சொல்வது எல்லாம் பெரியவர்கள் மனம் வருந்துவதால் ஏற்படும் கர்மவினையே. கொங்குப் பாரம்பரியம் இருந்தால் முதியோர் இல்லங்கள் இருக்காது. பெரியவர்கள் அவமதிக்கபடும் வீட்டில்தான் ஒழுக்கக்கேடான விஷயங்கள் அரங்கேறும்.

பெரியவர்கள் பேசும்போது மறுத்துப் பேசுவது, வாதாடுவது, குறுக்கே பேசுவது போன்றவற்றை நம்மவர்கள் செய்ய மாட்டார்கள். அவர்கள் மனம் கோணாமல் தங்களது மாற்றுக் கருத்தை தெரிவிப்பார்கள். ஒருநாளைப் பற்றி மட்டும் யோசிப்பவர்கள் அல்ல. தலைமுறைகளைக் கடந்து சிந்திக்கும் பக்குவம் உள்ளவர்கள். கொங்க வெள்ளாள கவுண்டர்கள் சமூகம் சீரோடும் சிறப்போடும், எல்லாருக்கும் வழிகாட்டும் பண்போடு வளந்ததற்கு, பெரியவர்களையும் அவர்கள் வார்த்தையையும் மதிக்கும் பண்பும் ஒரு காரணம்.




No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates