Trending

Wednesday 8 October 2014

உழைப்புப் போதை

கொங்கதேசத்தில் கொங்க வெள்ளாள கவுண்டர்கள் மற்றும் நம்மைச் சேர்ந்த குடிசாதிகள் அனைவருமே உழைப்புக்கு அஞ்சாதவர்கள் தான். உழைப்பு என்பது போதையாக மாறிப்போக வயதானாலும் சும்மா இருக்க முடியாமல் உழைத்துக் கொண்டே இருப்பது நமது பெரியவர்களின் வழக்கம்.
“குடியான புள்ள வெளையாட போனாலும் ஒரு கத்த வெறகோட வரும்” னு பழமொழி.. “ஆடாத அருங்கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்ணா இருக்கோணும்”.. வேலைக்கு அஞ்சக் கூடாது.. எதையும், “அப்பறம் செய்யலாம்” என்று தள்ளிப்போடும் மனச்சோம்பல் இருக்கக் கூடாது. யோசிக்கரதுனா கூட, “உக்காந்து ஓசிக்காத; உழுதுகிட்டே ஓசி” என்பார்கள்.. அதாவது யோசிக்கிறேன் பேர்வழி என்று காலத்தையும் வேலையையும் தட்டிக் கழிக்கக் கூடாது என்பது.

இதுதான் உண்மையான சொத்து. நம் வீட்டு பெரியவர்கள் எவ்வளவு வயசானாலும் அவர்கள் சக்திக்கு தகுந்தவாறு ஏதாவது வேலையை இழுத்துப் போட்டு செய்து கொண்டே இருப்பார்கள். எந்த வேலையும் சுத்தமாக இல்லாவிட்டாலும் அரிசி மூட்டையை அவிழ்த்து கொட்டி குருணை பொறுக்கிக் கொண்டிருப்பார்கள். இதை அடுத்த தலைமுறைக்கு சொல்லித் தர வேண்டும்..

அதாவது கவுண்டமூட்டு குழந்தைக வெளையாட போனாக்கூட ஒரு கத்தை விறகு பொறுக்கி கட்டிக்கிட்டு வந்திடுமாம்.. போன தலைமுறை வரை விடாமல் உழைக்க கடுமையாக போதிக்கப்பட்டு பயிற்சியும் கொடுக்கப்பட்டது.. இந்த தலைமுறையில் அது கொஞ்சம் தளர்ந்துள்ளது. எவ்வளவு வசதியுள்ளவர்களாக இருந்தாலும் இதை மறக்க கூடாது. நமது வெற்றி வசதிக்கு பின்னால் அயரா உழைப்பும், சத்திய நெறி தவறாமையுமே உள்ளது. இந்த குணம் முன்வாசலில் போனால் விரைவில் நம் சொத்துக்களும் பெருமைகளும் பின்வாசலில் போய்விடும். எனவே அனைவரும் உங்கள் குழந்தைகளுக்கு உழைப்பையும் தர்மம் தவறாமல் வாழவும் "பயிற்சி" கொடுங்கள்.

ஈரோடு வண்டியூரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சீரங்கன் (வயது75), இவர் தினமும் காலிங்கராயன் வாய்க்காலை கடந்து சென்று மாடுகளுக்கு புல் அறுத்து போடுகிறார்.தள்ளாத வயது, குளிரும் தண்ணீர் இழுக்கும் சுழல் எதைப்பற்றியும் அஞ்சாமல் உழைக்கிறார் இந்த முதியவர். 
(படம்&செய்தி நன்றி: தினத்தந்தி)

(நேர்மையும், வாக்குத் தவறாமையும், எந்த நிலையிலும் ஓயாது உழைக்கும் எண்ணமும்தான் நமது பரம்பரைச் சொத்து. அந்த மனோநிலைகள் தான் நம் வளர்ச்சி, செல்வச்செழிப்பு அனைத்துக்கும் அடித்தளம். அதை அடுத்த தலைமுறைக்கு எப்படி விதைப்பது என்று அனைவரும் சிந்திக்க வேண்டும்.)


No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates