Trending

Sunday 23 June 2013

கொங்க வெள்ளாளர்-சர்க்காரின் சூழ்ச்சி

கொங்க வெள்ளாளர்-சில அடிப்படைகள்:

வெள்ளாளர் என்பதே சரியான சாதி பெயர். முன்னாளில் வேளாளர் என்று அழைக்கப்பட்ட போதிலும்வேளாளர் என்ற சாதிப்பெயரோடு இன்றைய சர்க்கார் கொங்க வெள்ளாளருடன் பிற சாதிகளையும் இணைத்துள்ளனர்.


கொங்க வெள்ளாளர் மரபில் பின்வரும் சாதி பெயர்கள் மட்டுமே சேரும். 
  • கொங்கு வெள்ளாள கவுண்டர்
  • கொங்கு நாட்டு வெள்ளாள கவுண்டர் (நாட்டு கவுண்டர்)
  • தென்திசை வெள்ளாளர்/செந்தலை கவுண்டர் 
மேலே சொல்லப்பட்டவர்கள்ஒரே கலாசார பாரம்பரிய பின்னனியுடையவர்கள். தங்கள் நிர்வாக பொறுப்பால் நாட்டார்கள் சிறிதளவு வேறுபடுகிறார்கள். நாட்டார்கள் கொங்க தேசம் 24 நாடுகளிலும் இருப்பினும் திருச்செங்கோடு பகுதியிலுள்ள ஐந்து கூட்டங்களுக்கு மட்டுமே நாட்டு கவுண்டர் என்று சான்றிதழ் கொடுக்க அப்டுகிறது. இதுவும் வரலாற்றை திரிக்கும் முயற்சியாகும்.

இன்று கொங்கு வெள்ளாளருடன் இணைக்கப்பட்ட பிற சாதிகளான 

  • மொடவாண்டிகள் 
  • சங்குகட்டி கவுண்டர்கள்
  • நரம்புகட்டி கவுண்டர்கள் 
  • தொண்டு வெள்ளாளர்
  • திருமுடி வெள்ளாளர்
  • படைத்தலை கவுண்டர்கள்
  • பால வெள்ளாளர் 
  • பூசாரி கவுண்டர் 
  • அனுப்ப வெள்ளாளர் 
  • ரத்தினகிரி கவுண்டர் 
அவரவர் கலாசாரத்தில் சிறந்தவர்களே. ஒரே சாதி சான்றிதழில் இணைத்து அவர்களின் கலாசார மரபுகளையும்வரலாறு மற்றும் சமூக கோட்பாடுகளையும் அழிக்க நினைப்பது பிரிட்டிஷ் சர்க்காரால் துவங்கி இன்றுள்ள சர்க்காரால் கடைபிடிக்கப்பட்டு வரும் தவறான வழக்கமாகும்.

கூட்டம் என்பதும் கோத்திரம் என்பதும் ஒன்றே. பலர் கூட்டத்தை குலம் என்று சொல்வது தவறு.

சாதி-கொங்க வெள்ளாளர்
குலம் - கங்கா குலம் 
கோத்திரம் - கூட்டங்கள் (கன்னன், ஆந்தை, அந்துவன் போன்றன)

ஒரே குலத்துக்குள்தான் திருமணம் செய்ய வேண்டும். ஒரே கோத்திரத்துக்குள் (கூட்டம்) திருமணம் செய்ய கூடாது. இதை உறுதி செய்யத்தான் கொங்க வெள்ளாளர் திருமண சீர்களில் குலங்கோதுதல் என்னும் சீர் நடைபெறும்.

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates