Trending

Sunday 23 June 2013

சாராயம்-ஆண்மை குறைவு




சாராய போதை நோயை, நாகரீக அடையாளமாக மாற்ற துடிக்கும் மானங்கெட்ட மீடியா-சினிமா இருக்கும் இந்நாளில் கொங்கு சமூகத்தில் சத்தமில்லாமல் ஒரு மாற்றம் நடந்து வருகிறது.

தற்காலத்தில் விவாகரத்து நகர்ப்புறங்களில் கொஞ்சம் அதிகரித்துள்ளது. அதில் காரன காரியங்களை ஆராய்ந்து பார்த்தால் அதிகபட்சமாக சென்னை-பெங்களுரு போன்ற ஊர்களில் வேலை செய்வோரிடமும், அதிலும் குறிப்பாகவும் பொதுவாகவும் போதை நோய் உள்ளவர்கள் அதிக விவாகரத்து செய்வது தெரிய வருகிறது.

ஆறு மாதங்கள் விளையாட்டாக-சாதாரணமாக-விழாக்களுக்கென்று குடிக்க துவங்கினாலே சிறிய அளவிலேனும் ஆண்மையை பாதிக்க துவங்கிவிடுகிறது. போதை நோய் உடைய பெரும்பாலானோர் ஆரம்ப கட்டத்திலோ முற்றிய நிலையிலோ ஆண்மை குறைவுடையவர்களாக கண்டறியபட்டுள்ளனர். ஆண்மை பாதிக்காவிட்டாலும் குழந்தையின்மையை உருவாக்கி விடுகிறது.

இது ஆணி வேராக செயல்பட்டு குடும்பத்தில் சந்தேகம், வன்முறை, குழந்தையில்லா ஏக்கம் பிரச்சனை என முடிவில் விவாகரத்தில் கொண்டு விடுகிறது. இதை நுணுக்கமாக கவனித்த கொங்கு சமூகம், கடந்த சில காலமாக சாராய போதை பழக்கத்தை பெரிது படுத்தாது இருந்த நிலையை மாற்றி கொண்டுள்ளது. இப்போது சாராய பழக்கம் உடையவன் என்னும் எண்ணம் இருந்தால் பெண் கொடுக்கும் எண்ணத்தை விட்டுவிடுகிறார்கள். 

ஏன், பெண்களே வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள். இதன்மூலம், போதை நோயை பெருமையாக வெளியில் சொல்லும் போக்கு-பொது இடத்தில் வெக்கமின்றி சாராயம் குடிக்கும் போக்கு, குறைய துவங்கியுள்ளது. இது நம் சமூகத்துக்கு நல்ல மாற்றம்..!

நன்றி கொங்கு சமூக பெண்களே!!

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates