Trending

Friday 11 December 2015

வரன் தேடலில் சிந்தனை மாற்றம்

பெண்ணைப் பெற்ற மகராசர்களே.. உங்களால் இந்த சமூகம் சந்தித்த - சந்தித்துக் கொண்டிருக்கும் இழப்புகளை கொஞ்சம் பட்டியலிடுகிறோம் பாருங்கள்.. சமுதாயத்தில் உங்கள் எண்ணப்போக்கால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைக் கொஞ்சம் கவனியுங்கள். கல்யாணம் செய்யும்போது எவை எவை பார்க்கப்படனும் என்று நாம் அறிவது அவசியம்.


“பெண்ணைப் பெற்றவர்களே” என்றதும், கல்யாணமாகாத மாப்பிள்ளைகள் உங்கள் கோபத்தை கொட்டும் வாய்ப்பு என்று எண்ண வேண்டாம், உங்கள் வீட்டிலும் பெண் உள்ளார்கள் அவர்களை வைத்து பார்க்கையில் நீங்களும் தான் இதில் அடக்கம்.



சமூக நலனுக்காக கவுண்ட பசங்களிடம் உருப்படியான விவாதம் பண்ண துவங்கினாலும் சரி, அவங்க நலனுக்காக பேசத் துவங்கினாலும் சரி, அவர்கள் கடைசியா முடிப்பது பெரும்பாலும், "எல்லாம்ஸ் சரிதானுங்க மாமா.. பொண்ணு குடுக்க மாட்டானுங்களே மாமா!" என்பதுதான். 

தொழில்-விவசாயம்: 
விவசாயம் சீரழிந்து வருகிறது. விவசாயத்தில் லாபமில்லை, மேற்குலக நாகரீக மோகம் என்பது ஒருபுறம் இருப்பினும், பெரும்பான்மையான நமது மக்கள் விவசாயத்துக்கு முழுக்குப் போட காரணம் பெண் கொடுப்பவர்கள் விவசாய வரங்களை ஒதுக்குவதுதான். இன்னும் தெளிவாகவே பாப்போம். கொங்கதேசத்தில் சில பகுதிகளில் வறட்சியுண்டு, சில பகுதிகள் என்றும் நீர்வசதியுடைய ஆற்றுக்கால் வாய்க்கால் பாசன பூமிகளாக இருக்கும். எனினும் மீடியாவில் தொடர்ச்சியாக, விவசாயி என்றாலே பாவப்பட்ட ஜீவனம், சோகம் அழுகை என்று காட்டியதன் விளைவு, விவசாயிக்கான சமூக அந்தஸ்து இறங்கிப் போய்விட்டது. எதார்த்தத்தில் ஐடி காரர்களை விட பல மடங்கு சம்பாதிக்கும் விவசாஇகல் இன்றும் உள்ளனர். அந்தஸ்து மோகம், சமுக பார்வை, தனது பெண் விவசாய வேலைக்கு போய் கஷ்டப்படக் கூடாது என்ற மாய எண்ணத்தில் நகர ரசாயன சாக்கடைக்குள் பிடித்து தள்ளி விடுகிறார்கள். விளைவு? விவசாயமும் சரிகிறது; பெண்கள் மற்றும் அடுத்த சந்ததியும் நோயாளிகளாக வாழ்கையை அனுபவிக்க இயலாத நகரத்து புழு பூச்சிகளாக காலத்தை கழிக்கிறார்கள்.

இதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் போன தலைமுறை விவசாயம் கற்று செய்யாமல் இருந்தனர்; இந்த தலைமுறை விவசாயம் கற்காமலே விட்டுவிட்டார்கள். விவசாயம் கேவலமாக சித்தரிக்கப்பட்டதில் பெண் கொடுப்போரின் மனோநிலை முக்கியப் பங்காற்றியுள்ளது. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், இன்று தொழில் துறையிலும் சமூகத்ஹ்டிலும் நம் சமூகம் மரியாதையோடு பார்க்கப்பட காரணம், நமது விவசாயப் பின்புலம்தான். நாம் பல தலைமுறை விவசாயம் செய்த ஜீன் உள்ளவர்கள் ஆதலால் கடுமையான உழைப்பும், கருத்தும் நுணுக்கமான பார்வையும் இயல்பில் நமக்கு உண்டு. இரண்டு மூன்று தலைமுறை நாம் விவசாயத்தை கைவிட்டால் அந்த திறமைகள் நிச்சயம் நம்மை விட்டு நீங்கும். விவசாயம் நமது வாழ்வு வல்லம, குணம் அனைத்துக்கும் உயிர்நாடி. இது நம் சமுதாயத்துக்கு மட்டுமல்ல; வேளாண்மை செய்து உலகுக்கு சோறு போடுங்கள் என்று நம் வம்சத்தை உருவாக்கிய மகாவிஷ்ணுவுக்கே செய்யும் துரோகம்தான். 

அடுத்து தொழில்துறை. நல்ல குடும்ப தொழில் இருப்பவர்கள் கூட தங்கள் தொழிலுக்கே வர விரும்புவதில்லை, பெற்றோரும் அனுமதிப்பதில்லை. நம் சமூகம் போன தலைமுறையில் முன்னேற காரணம் ஏராளமான தொழில்முனைவோர் இருந்ததுதான். இந்த தலைமுறையில்  புதிய தொழில்முனைவோர் எண்ணிக்கை எவ்வளவு? வீழ்ச்சிக்கு காரணம் என்ன? சலூன் கடை வைத்திருப்பவன் கூட மாதம் 30-60 ஆயிரம் சம்பாதிக்கிறான். நகரத்துக்கு வேலைக்கு போகும் நம் இளைஞர்கள் 12-22 ஆயிரம் தான் சம்பாதிக்கிறார்கள். இன்று மாதம் 1.5 லட்சம் சம்பளம் வாங்கினாலும் குடும்பஸ்தர்கள் வருஷம் 5 லட்சம் மிச்சம் செய்வது அரிது. இந்த பிழைப்புக்குத்தானா தொழில் துறையை நிராகரிக்கிறீர்கள்?? நம் தோட்டத்தில் கூலி வேலை செய்தவர்கள் வாழும் பகுதிக்கு போய் பாருங்க, எத்தனை பேர் டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற கம்பெனியில் வேலை செய்யறான்னு.. வேலையில் இருப்பவனுக்கு பொண்ணு கொடுத்தால் இன்னொரு இருவது வருஷம் கழிச்சு உங்க பொண்ணோட வாழ்க்கைத் தரம் எவ்வளவு கீழாக இருக்கும் னு யோசிச்சு பாருங்க.

நல்ல நீர்வளம் மற்றும் போதுமான நிலத்தோடு விவசாயமோ, இல்லை நல்ல தொழிலோ, அல்லது விவசாயத்தோடு தொழில் செய்பவன் தான் என்றென்றும் ராஜா. 

வீடு-கார்-ஆடம்பரம்:
முன்பெல்லாம் கல்யாணம் உருதிசெய்யப்பட்டால் மாப்பில்லைப்பேன் வீட்டார் சம்மந்தி ஊருக்கு சென்று அவங்க பண்ணையத்தைப் பாப்பாங்க. அதுக்கு "காடு தோட்டம் பாக்க போறது" னு சொல்லுவாங்க. அப்படி பார்க்கையில் சாணி குப்பை அளவு, பசுக்கள் எண்ணிக்கை வைத்து அந்த பண்ணையம் எவ்ளோ பெருசு னு தீர்மானம் செய்வாங்க. காடு தோட்டம் பார்க்க போறதுநகரத்தையே "ஊடு வாச பாக்க போறது" னு மாத்திட்டாங்க. இதுல என்ன தப்பு னு கேட்பீங்க. யோசிச்சு பாருங்க. காடுகரைக்கு மரியாதை கொடுக்காமல் வீடு கார் ஆடம்பரத்துக்கு மரியாதை கொடுக்கரதால இப்போ பாரம்பரிய காடு தோட்டங்களை விற்று வீடு கட்டுவது, கார் வாங்குவது, ஆடம்பர கல்யாணங்கள்  செய்வது போன்ற மிக மோசமான செயல்களை நம் இனத்தார் செய்துவருகிறார்கள். 

வீடுகள் கட்டுவதால் கொங்க வெள்ளாள கவுண்டர்கள் செல்வம் பெருமளவு கரைகிறது. முதலீட்டு நோக்கில் வீடு கட்டுவது; காம்லெக்க்ஸ் கட்டி வாடகைக்கு விடுவது போன்ற முட்டாள்தனம் வேறு இல்லை. உதாரணமாக ஒரு வீடு கட்ட முப்பது லட்சம் செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம்; ரண்டு ரூபா வட்டின்னாலும் மாதம் அறுபதனாயிரம் ரூபாய் வருமானம் வீணாகிறது.
ஒரு வீட்டின் ஆயுள் ஐம்பது வருஷம் என்றே எடுத்துக் கொண்டாலும், வட்டியும் முதலுமாக நமக்கு ஏற்படும் நஷ்டம் எவ்வளவு என்று பாருங்கள். இது வெறும் பேங்க் வட்டிதான். இவ்வளவு நஷ்டப்பட்டு வீடு தேவையா?

அதோட, ஒரு வீட்டின் ஆயுள் அதிகபட்சம் ஐம்பது வருஷம். ஐம்பது வருஷத்தில் முதல் முப்பது லட்சமும், வட்டி வருமானம் ரூ.3 கோடி 60 லட்சம், ஆகமொத்தம் எளிதாக பார்த்தாலும் நான்கு கோடி நஷ்டமாகிறது. எந்த ஊரில் எங்கே வாடகைக்கு விட்டாலும் வாடகை வருமானம், முதலீட்டுக்கு 25 பைசா வட்டியை கூட தராது. தேவையே இல்லை என்றாலும் பெண் கொடுக்க மாட்டார்கள் என்று காட்டை விற்றாவது வீட்டை கட்டி நம் வம்ச சொத்துக்களை சிதைக்கிறார்கள்.

காருக்கும் இதுவே வாதம். தேவையென்றால் தேவைக்கு வாங்கலாம் வீடு கட்டலாம். அனால் பெண் கட்டவேண்டும் என்பதற்காகவே தேவைக்கு மீறியும் ஆடம்பரமாகவும் வீட்டை கட்டி காரை வாங்கி ஆடம்பரக் கல்யாணம் செய்து செல்வத்தைக் கரைக்க வேண்டியுள்ளது.

நகர வாழ்க்கை:
நகர வாழ்வின் மீது தேவையற்ற மோகம் வளர முக்கியமான காரணங்களில் ஒன்று பெண் கொடுப்போர் மனோநிலை. "டீசன்ட்-நாகரீகம்" என்ற மாய வலையில் சிக்கி இன்று எத்தனை குடும்பங்கள் தங்கள் அடையாளம் தொலைத்து, வாழ்வு, வசதி, சொத்துக்கள் அனைத்தும் தொலைத்து நிற்கிறது தெரியுமா? நகரம் என்றால் சென்னை பெங்களூரு வெளிநாடுகள் மட்டுமல்ல; கோவை, கரூர், ஈரோடு மாநகரம், திருப்பூர் போன்றவையும் தான். நகரங்கள் மனிதர்கள் வாழ தகுதியே இல்லாத கடுமையான விஷப் பொய்கைகள். நோய் பெருக்கிக் கூடங்கள். மனிதர்களை மெசின்கள்போல மாற்றிக் கொண்டிருக்கும் சாப பூமிகள். பிழைக்கலாம் வாழ இயலாது.

சென்னை இந்தியாவிலேயே மிக மோசமான நீர்த்தரம் உள்ள நகரம் 10,000ppm கடுமை. இந்தியாவில் அதிக கேன்சர், கர்ப்பப்பை கோளாறு உள்ளவை திருப்பூர் கரூர் மற்றும் ஈரோடு மாநகரங்கள்.மனிதனின் அடிப்படை தேவையான காற்று, நீர், உணவு எல்லாமே விஷமாகிப் போன வாழ்க்கை. எதையுமே நம்பி உண்ணமுடியாது ஆயினும் வேற வழி என்று தின்று தொலைக்கிறார்கள். சென்னை போன்ற நகரங்களில், 30 நிமிஷம் ரோட்டில் நடந்துவந்தால் உங்கள் உடலில் துர்நாற்றம் வரும். பத்து வருஷம் அங்கே வாழ்ந்தால் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு உட்பட ஏராளமான நோய்கள நிச்சயம் வரும். 

இதற்குமேல், நகரங்களில் வளரும் குழந்தைகள் மனோநிலை மிக மோசமானதாக உள்ளது. குடும்பப் பற்றோ, நமது பண்பாடுகளோ பெருமளவில் இல்லை. எதை எடுத்தாளும் அதனால என்ன, என்பது போன்ற ஆபத்தான மனநிலை. நகரங்கள் பலவீனமான மனிதர்களை எவ்வளவு சுரண்டமுடியுமோ அவ்வளவு சுரண்டும் "பொருளாதார பிராத்தல்கள்". அந்த பாவ பூமிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனநோய் ஏன்??

கல்யாண வயசு:
கல்யாண வயசை உங்கள் இஷ்டத்துக்கு ஏற்றி விட்டீர்கள். பல பெற்றோர்கள் பெண் சம்பாதிக்கும் பணத்தில் அவளைப் படிக்க வாய்த்த செலவையும், கல்யாண செலவையும் எடுத்துவிடலாம் என்று வரவு செலவு கணக்கு பார்த்து பொண்ணு சொல்றா என்று சாக்கு சொல்லி கல்யாணத்தை தள்ளிக் கொண்டே போகிறார்கள்.கல்யாண வயசை இயற்கை தீர்மாநிக்கணும், சர்க்கார் சட்டமோ, வேலை-படிப்போ இல்லை. பருவத்தில் ஏற்படும் இயற்கையான உணர்வுகளுக்கு முறையான வடிகால் தர வேண்டியது பெற்றவர் கடமை.

பருவக் கோளாறில் வேலை செய்யும் இடத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால் வாழ்க்கை முழுக்க குற்ற உணர்ச்சி அந்த பெண்ணுக்கு. காதல் வலையில் வீழ்ந்து மீண்டவர்கள் பலர் இன்று வீட்டில் கல்யாணம் பேசும்போது காதலனின் மன உளைச்சல் தொந்தரவுகள் சந்தித்து வருகிறார்கள். இதுபோன்ற வால்ககியையும், மனதையும், மகிழ்ச்சியைய்ம் சிதைக்கும் எண்ணற்ற பிரச்னைகள் பருவம் தவறிய கல்யாணங்களால் உண்டாகிறது. இதனால் நம் பசங்களுக்கும் கல்யானமாகாமல் வம்சவிருத்தி தடைபடுகிறது. பணத்திற்காக இந்த பாவங்கள் வேண்டாமே.

கல்யாணத்துக்கு தொல்காப்பியம் என்ன சொல்கிறது?
தொல்காப்பியம் குடிப் பெருமை, குடி ஒழுக்கம் வழுவாமை, தன்னம்பிக்கை, ஆணின் வயது கூடியிருத்தல், உருவப் பொருத்தம், இன்ப நுகர்ச்சி உணர்வு சமமாக அமைந்திருத்தல் (யோனிப் பொருத்தம்) , குடும்பச் செய்தி காத்தல், அருளும், உணர்வும் ஒத்திருத்தல், பொருளாதார உயர்வு/தாழ்வு மனப்பான்மை என்ற மனநோய் இல்லா சமநிலை ஆகிய பத்துப் பொருத்தங்கள் அவசியம் என்கிறது.

பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு
உருவு, நிறுத்த, காம வாயில்
நிறையே, அருளே, உணர்வொடு திருவென
முறையுறக் கிளத்த ஒப்பினது வகையே

இல்வாழ்க்கைக்குப் பொருந்தாத பத்துத் குணங்களையும் தொல்காப்பியம் கூறுகிறது. தற்பெருமை, கொடுமை, புறங்கூறாமை, வன்சொல், விடாமுயற்சியின்மை, குடி ஒழுக்கம் காவாது குடிப்பிறப்பை மட்டுமே உயர்த்திப் பேசுதல், வறுமை குறித்து வாடக்கூடாது, மறதி, ஒப்பிட்டுப் பார்த்தல், பேசுதல் ஆகிய பத்துத் தன்மைகளும் இருக்கக் கூடாதவை.

நிம்புரி, கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொல், பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறப்போடொப்புமை
என்றிவை இன்மை என்மனார் புலவர்.

தற்காலத்தில் நாம் காண வேண்டிய குணங்கள் என்ன?

• ஒழுக்கமானவனா? ஆரோக்கியமானவனா? (ஆரோக்கியமும், ஒழுக்கமும் சகோதரர்கள். உடல்நலனில் அக்கறை இருந்தால் பெரும்பாலும் தீய பழக்கம் இராது)

• அருகே உள்ள கிராமமா, சொந்தபந்தமா? (குண, சிந்தனை வேறுபாடுகள் குறைவாக இருக்கும். இணக்கம் அதிகமாக இருக்கும். போக்குவரத்து, அவசர உதவிகள் அனைத்துக்கும் வசதி)

• நிதானமான குணம் உள்ளவனா? சிந்திக்கும் திறனும் உலக அறிவுமுடையவனா? (கல்வி சான்றிதழ் உள்ளவனா என்பதை விட சான்றோனா என்று பாருங்கள்)

• கொங்கு பண்புள்ள குடும்பமா? பாரம்பரியம் உண்டா? பையன் வளர்ந்த சூழல் எப்படிப்பட்டது?

• உழைக்கும் எண்ணமுடையவனா? வேலையில் பொறுப்பும், சம்பாதித்ததை சேமிக்கவும், சேமித்ததை வைத்து காக்கவும் கருத்தும் கருக்கடையும் உள்ளவனா? இல்லை ஊதாரியா, செலவாளியா? (இன்று அப்பன் பாட்டன் காசில் பெரியதனம் பண்ணி ஊரை சுற்றிக் கொண்டு டாம்பீகம் செய்யும் சிறுவர்கள் மீது கொஞ்சம் ஈர்ப்பு அதிகமாகவே உள்ளது)

• சொந்தபந்தங்களை அரவணைத்து செல்பவனா? ஆன்மீக நாட்டம் உள்ளவனா? திராவிட-கம்யூனிச-முற்போக்கு விஷம் இல்லாதவனா? பெரியோரை மதித்தல், கனிவான பேச்சு, செயல்வீரியம் போன்ற தன் குணங்களால் செல்வாக்கை வளர்த்துக் கொண்டவனா?

• காடு தோட்டம் சிறிதேனும் உண்டா? விவசாயம் அறிந்தவனா, செய்தவனா? (குடியானவனின் அடிப்படைத் தேவை; கொங்க குடியானவர் வெற்றிக்கும் நற்பண்பிற்கும் காரணம் விவசாய பின்புலம்)

மேலே உள்ள குணங்கள் உள்ளவன், எவ்வளவு ஏழையாக இருப்பினும் நிச்சயம் மேலே வந்துவிடுவான். பெண் கொடுத்த உங்களுக்கும் மரியாதையையும், அன்பையும் வாரி வாரி கொடுப்பான். வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் சேர்ப்பான். நீங்கள் தருவது கொஞ்சம் என்றாலும், நிறைய என்றாலும் அதைப் பலமடங்கு ஆக்கப்பூர்வமாக பெருக்கிவைப்பான். நல்ல வம்சத்தை உருவாக்குவான்.

இதுவே ஒரு பரம்பரைப் பணக்காரன் மகன், மேலே சொன்ன குணங்கள் இல்லாதவன்; நாகரீக மோகமும், செலவாளியாகவுமிருப்பவன்; சொந்தங்களை துச்சமென நினைப்பவன் இருக்கிறான். அவன் இப்போது பெரும் பணக்காரன் என்று பொண்ணு கொடுக்கிறீர்கள். அவன் சொத்து எவ்வளவு நாள் தாங்கும்? அவன் தந்தை இருக்கும்வரை. பிறகு? அவன் சொத்தையும அவனால் காத்துக் கொள்ள இயலாது, வளைந்து வேலையும் செய்ய முடியாது. நீங்கள் எவ்வளவு கொடுத்தாலும் அந்த வண்டிக்கு போதாது. சொந்தங்களை மதிக்காதவனை வைத்து என்ன அன்பை உங்களால் உணர முடியும். உங்களிடம் சொத்து இருந்தால்தான் உங்களையும் மதிப்பான்; கால சூழலால் உங்கள் குடும்பம் நலிவுற்றால்?? உங்களை விடுங்கள், அந்த பெண் நிம்மதியாக வாழ்வாளா? நீங்க தான் நிம்மதியாக இருப்பீர்களா?வாழ்க்கைக்கு அர்த்தமென்ன?? நகரத்தில் பெண்ணைக் கொடுத்துவிட்டு நாளொரு வியாதி பொழுதொரு பிரச்னை, சீரழியும் அடுத்த தலைமுறை என்று வாழும் நரக வாழ்க்கை தேவையா??

5 comments:

  1. காருக்கும் இதுவே வாதம். தேவையென்றால் தேவைக்கு வாங்கலாம் வீடு கட்டலாம். அனால் பெண் கட்டவேண்டும் என்பதற்காகவே தேவைக்கு மீறியும் ஆடம்பரமாகவும் வீட்டை கட்டி காரை வாங்கி ஆடம்பரக் கல்யாணம் செய்து செல்வத்தைக் கரைக்க வேண்டியுள்ளது ..... வேறு என்ன செய்வதுங்க... சமீபத்தில் பெருந்துறை அம்மா பேசியதை கேட்கவில்லையா...?.

    ReplyDelete
  2. முருகானந்தம்20 January 2016 at 17:59

    நல்ல மாற்றங்கள்..

    ReplyDelete
  3. ஒரு பணக்கார வீட்டு பையன்.. மாதம் பத்து லட்ச வருமானம். பல தொழில்கள்.. நெனச்சா டூர் பாரின் கார்... கொஞ்சம் அகங்காரம், தலைக்கனம்.. பேச்சில் கனிவு இல்லாமல் கர்வம் தலைதூக்கி இருக்கும்.. வயசு 33, பொண்ணு கிடைக்கல..
    பக்கத்து ஊரில் ஒரு பையன்.. ஆறு ஏக்கர் தோட்டம்.. உள்ளூரிலே வாழ்க்கை..மேலும் அக்கம்பக்கத்தில் காடு கந்தாயதிற்கும் ஓட்டுகிறார்.. ட்ராக்டர் கொண்டு உழவு ஒட்டித் தரும் வேலையும் செய்கிறார். நல்ல உழைப்பாளி; அன்பாக பழகக் கூடியவர். வயசு 29. போன மாசம் கல்யாணம் முடிந்தது. விவசாய வேலைகள் நன்றாக தெரிந்த பெண். இப்போது கவுண்டனும் கவுண்ட்சியும் ஜோடியா தோட்டதுக்கு போய் பாடுபடுவதும், சொந்தபந்தத்தொடு உறவாடுவதும் கண் கொள்ளா காட்சி.. இதுவும் நம்ம சமுதாயத்தில் தான் நடக்கிறது.

    ReplyDelete
  4. சமீபத்தில் நம் குடியானப் பெரியவரை சந்தித்தேன். சமுதாயம் பற்றி பல விஷயங்களை பேசுகையில் வருத்தமும், கருத்துகளையும் கூறிக் கொண்டிருந்தார். அவர் குடும்பம் மற்றும் அவர் பெண்ணின் கல்யாணம் பற்றி பேசினேன். அப்படியே அவர் முகம் மலர்ச்சியும் பூரிப்புமாக மாறிவிட்டது.

    ஒரு அரசனின் தோரணையோடு அவர் சொன்னார், " கல்யாண மூய்க்கரத பத்தி பேசில எம்பிள்ள ஒரே வார்த்தை சொல்லிட்டாலே.. 'நீங்க யார சொல்றீங்களோ அவீளையே நா கட்டிக்கரங்பா; உங்குளுக்கு புடிச்சிருந்தா சேரி' னுட்டா.. பெத்த அப்பனுக்கு இதுக்குமேல என்ன சந்தோசங்கண்ணு வேணும்? நான் பக்கத்து ஊருலயே எம்பொறந்தவ பயனுக்கு கட்டிக் குடுத்துட்டேன். நம்புளுது நாப்பது ஏக்கரா பண்ணையம் கண்ணு. இருந்தாலும் கல்யாணம் சிம்பலாத்தான் பண்ணுனேன். ஆலவட்டம் பண்ணி பாடுபட்டு சம்பாரிச்ச காச ரண்டு நாலில கூடவைக்கறது எதுக்காவுது? நம்ளுக்கு செலையா வக்கரம்னு சொன்னாங்க? கல்யாணச் செலவுக்கு னு சேத்தி வச்சிருந்ததயும் பிள்ளைக்கே குடுத்துட்டேன். அவிய காடு புடிச்சப்ப உதவுச்சு. பிள்ளயும் மாப்பலயும் நல்லா மதிப்பா பொழக்குதுக. தெரியாத பக்கம் குடுத்துட்டு எதொன்னுனாலும் திக்கு திக்குன்னு என்ன நெனப்பாங்கலோ எப்படி நெனப்பாங்களோ னு கெடக்கரதுக்கு நம்பு கண்ணு மின்னால வளந்த பயனுக்கு குடுத்துட்டா நாம எதொன்னும் உரிமையா பேசலாம் பாரு. இப்ப நல்லது கெட்டதுநா டக்குனு ஓடியாந்து பாக்கறாங்க.. வாரம் ரண்டு சலக்கா னாலும் பிள்ள பேரனை எல்லாம் பாத்துக்கறேன்.. எவ்ளோ பணங்காசு இருந்தாலும் இப்பிடி சந்தோசம் கெடைக்குமா சொல்லு”

    குடியானவர்களுக்கு அவர்கள் வெள்ளாமையும் வீட்டு பெண்ணும் சொன்னபடி நடந்தால் பூமியிலேயே சொர்க்கத்தை கண்டுவிடுவார்கள். வசதிகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.

    ReplyDelete
  5. ஈரோடு திருப்பூா் கோவை சோ்ந்த ஆண் பெண் வரன்களுக்கு (கொங்கு மட்டும் ) அனுகவும் பா.கணேசமூா்த்தி கணேஷ் திருமண தகவல்மையம் திருப்பூா்.9994882635

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates