Trending

Thursday 4 July 2013

கொங்க வெள்ளாளர் ஆதி குரு - போதாயன மகரிஷி



போதாயன மகரிஷி கங்கா குலத்தவரின் ஆதி குருவாவார். கங்கா குல முதல்வனான மரபாளனுக்கு விவசாயம் முதற்கொண்டு சகல வித்தைகளையும் பயிற்றுவித்தவர். 

(நன்றி: http://gangakulam.blogspot.in/)

இவர் இயற்றிய சாஸ்திரங்கள் மிக தொன்மையும் பழமையும் உடையவை. இவர் யஜூர் வேத சாஸ்திர அடிப்படையில் பயின்றவர். இவர் தர்மம், கணிதம் , அன்றாட கடைபிடிக்க வேண்டிய நியமங்கள் என் பல விஷயங்கள் குறித்தும் எழுதியுள்ளார். இவரின் நியம விதிகளை பிராமணர்களில் பல வகை ஐயர் - ஐயங்கார் களும் கொங்கு நாட்டு பிராமணர்களும் குருக்களும் பின்பற்றுகிறார்கள். Pythagoras theorem மற்றும் Pi என்று இன்றைய அறிவியல் உலகம் சொல்லும் சூத்திரத்தை அன்றே வகுத்தவர். இவரின் கணித சூத்திரங்கள் பல ஆராய்ச்சிகளுக்கு பயன்பட்டது.

போதயனர் மரபாளனுக்கு கற்பித்த விஷயங்கள் மரபாள சூடாமணி என்னும் மிக பழமையான நூலில் தொகுக்கப்பட்டது.

மரபாள புராணத்தை அடிப்படையாக கொண்டு வீராச்சி மங்கலம் கந்தசாமி கவிராயர் வேளாள புராணம் என்னும் நூலை இயற்றினார்.வேளாள புராணம் - மரபாள சூடாமணியை தழுவி எழுதப்பட்டது

பங்குனி மாத அமாவாசை போதாயன அமாவாசை எனப்படுகிறது. இந்த அமாவாசையானது, பாரத போருக்கு களப்பலி கொடுக்க வேண்டி, ஸ்ரீ கிருஷ்ணர் சூர்ய சந்திரரை சந்திக்க வைத்து ஏற்ப்படுத்திய அமாவாசையை அனுசரித்து வருவதாகும். அன்றைய தினம் அவரவர் தத்தமது குலகுருவை தரிசிப்பது சிறப்பாகும்.

உங்கள் குலகுரு யாரென்று தெரியாதவர், கமேண்டில் உங்கள் கூட்டம், குலதெய்வ (காணியாச்சி) கோவில் அது உள்ள ஊர் மூன்றையும் தெரிவிக்கவும்..!



6 comments:

  1. வெண்டுவன் குலம்
    அருங்கரை அம்மன் கோவில்,
    பெரிய திருமங்கலம்

    ReplyDelete
  2. kadai kulam
    keeranoor selvanayagi amman

    ReplyDelete
  3. வெண்டுவன் குலம்,
    ஸ்ரீ புதுக்காளியம்மன்,
    மண்மங்கலம், கரூர்...

    ReplyDelete
  4. பொருளிந்தர் குலம்
    செல்லாண்டி அம்மன்
    ஆதி கருமாரபுரம்
    திருச்செங்கோடு

    ReplyDelete
  5. Moooda kanna kuttam Nasiyanur appaathaal

    ReplyDelete
  6. Punjai puliyaan kothiram kulaguru and kuladeivam theriyavillai

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates