Trending

Saturday 27 July 2013

கோமாளி

கோமாளி
---------

கோமாளிகள் என்பவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் மிகவும் மதிக்கப்பட்ட அங்கம. கிராமத்திற்கு மணியக்காரர், தலையாரி, கொத்துக்காரர் போன்று கோமாளியும் ஒரு அங்கம. கிராமங்களில், விழாக்களில் முன்னுரிமை கொடுத்து மதிக்கபட்டவர்கள். பண்டிகைகள் துவக்கம், பல சடங்குகளில் இவர்கள் பங்கு உண்டு. நகைச்சுவை, சமயோசிதம் போன்றவற்றை வெளிப்படுத்துவார். பல சமூகங்கள் வாழும் கிராமத்தில் நல்லிணக்கத்தையும், ஒற்றுமையும் வளர பாடுபடுபவர்.

கோமாளிகள் என்பவர்கள் மகாவிஷ்ணுவின் அம்சமாவர். பழமையான கோவில் கோபுரங்களிலும் கோமாளிகளின் சிற்பத்தை காணலாம்.

மோளிப்பள்ளி அண்ணமார் கோவிலில்
கோமாளி அய்யனாக மாயவர் (மகாவிஷ்ணு) - கோமாளி வடிவில் 

அருணகிரி சுள்ளிப்பளையம் - கவுண்டச்சிபாளையம் (பெருங்குறிச்சி காணி)
கவுண்டச்சியம்மன் கோவில் கோபுரத்தில் கோமாளி (சில்மிஷ வேலைகள்)

ஆகவே பிற பண்டிகைகளை விட ஆடி பதினெட்டுக்கு இவர்கள் பங்கு முக்கியமானது. ஆடி 18 பாரத போர் முடிந்த தினம். அதை நினைவு கூறவே இன்று நாம் கொண்டாடும் பண்டிகை. போர் முடிந்த தினத்தில் மகாவிஷ்ணுவை காணும் கண்ணோட்டத்தில் ஊர் கோமாளியையும் மக்கள் கண்டு செல்வர். கோமாளி இன்றி பண்டிகை பூர்த்தியாகாது. ஒவ்வொரு கிராமத்திற்கும் கோமாளி உண்டு. 
பெரியமணலி ஸ்ரீ கரியகாளியம்மன் கோவிலில் 

உங்கள் கிராமத்தில் இருந்த கோமாளியை கண்டுபிடித்து இந்த வருடம் பண்டிகையை சிறப்பிக்க செய்யுங்கள். ஊர் கவுண்டர்கள், தர்மகர்த்தாக்கள், மற்றும் கொங்க தேச பாரம்பரியத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் இணைந்து செய்ய வேண்டிய பணி.

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates