Trending

Sunday 4 August 2013

தீரன் சின்னமலை

தீரன் சின்னமலை



சில அரிய தகவல்கள்

• தீரன் சின்னமலை என்ற நபரே கிடையாது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் தீரன் சின்னமலை எனும் தீர்த்தகிரி சக்கரை உத்தம காமிண்ட மன்றாடியார் குறித்த கல்வெட்டுகள் மூன்றும், பிரிட்டிஷ் கைபீதுகள் மூன்றும் ஆதாரங்களாக உள்ளன. அவர் குறித்த வாய்மொழி வரலாற்று தகவல்கள் கொங்கு நாடெங்கும் பரவி கிடக்கிறது. கும்மிப்பாடலும் உண்டு.

• நாட்டின் சுயாட்சிக்காக தீர்த்தகிரிக் கவுண்டர் காலத்தில் போராடியவர்களில் பெரும்பாலும் மன்னர்களே. ஆனால் கொங்கதேசத்தைப் பொறுத்தவரை ஒரு சாமானிய வெள்ளாள குடும்பத்தில் பிறந்து தன் வீரம், திறமை, மக்கள் சேவையால் ஆட்சி அதிகாரத்தை பிடித்து பட்டக்காரரராக உயர்ந்தவர் தீர்த்தகிரிக் கவுண்டர். மன்றாடியார் என்ற பட்டம் இவரின் தியாகம் வீரத்தால் கிடைத்தது, பரம்பரை உரிமையால் அல்ல. பரம்பரை உரிமையாக இவரது பெரியப்பாவே பட்டத்துக்கு உரியவர்; ஆயினும் பின்னாளில் மக்கள் செல்வாக்காலும் வீரத்தாலும் தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டவர் ஆவார். 

• கொங்கு வெள்ளாளரின் கொடி பொன்மேழிக்கொடி. எனினும், பயிர கூட்டத்தின் தனிக்கொடி அன்னப்பறவை பொறிக்கப்பட்ட அன்னக்கொடி. தீர்த்கிரியின் கொடியும் அதுவே.

• அதேபோல வெள்ளையர்களுக்கு ஜால்ரா அடித்த சிலர் தீர்த்தகிரி கவுண்டரை எதிர்த்தனர். சிலர் அவரைக் காட்டிக் கொடுத்தனர். வெள்ளைக்காரர்கள் படையெடுக்க வழி கொடுத்தது, படை கொடுத்தது என்று பலவாறு துரோகத்தை செய்தனர். சிலர் தனிப்பட்ட முறையில் பிடித்து கட்டி வைத்து அடித்தனர் (அடித்தவன் தலையை தீர்த்தகிரி மறுநாளே வெட்டி வீசிவிட்டார் என்பது வேறு விஷயம்). சமையல்கார நல்லையன் செய்த துரோகத்தை விட சில அயோக்கியர்கள் செய்தது மாபெரும் தேசத்துரோகமாகும். இன்றளவும்கூட தீரன் சின்னமலையின் தியாகத்தை தரக்குறைவாக பேசுபவர்கள் உண்டு. தான் அதிகாரத்தை பிடித்தபோது குற்றவாளிகள் சிலரை பட்டக்காரன் என்ற பதவியில் இருந்து பதவிநீக்கம் செய்தார் சின்னமலை. இருவரை வெட்டி கொன்றார். தீரன் சின்னமலையை கொள்ளையன் என்றும் கொலைகாரன் என்றும் பட்டக்காரர்கள் எழுதிக் கொடுத்த கைபீது ஆவணங்கள் இவற்றிற்கு ஆதாரமாக அரசு ஆவணங்களாக இன்றும் உள்ளது. 

• தீர்த்தகிரி சர்க்கரை கவுண்டரின் அக்காவை மணந்தவர் வெள்ளோடு சாத்தந்தை கூட்ட உலகுடையார். இவரே காங்கயம் பட்டாலியில் போற்பயிற்சிக்கு காணி வாங்கி முன்னின்று உதவி செய்தவர் (மாமன் துணை இருந்தால் மலை ஏறலாம்!)



• தம்பா கவுண்டர் என்பது தீர்த்தகிரி சர்க்கரை உத்தம காமிண்ட மன்றாடியாரின் இன்னொரு பெயர்.

• தீரன் சின்னமலை "தீர்த்தகிரி சக்கரை உத்தம காமிண்ட மன்றாடியார்" என்று குறிக்கப்பட்ட கல்வெட்டு சிவன்மலையில் இருந்தது. பட்டக்காரருக்குரிய இந்த பட்டம் வம்ச உரிமையாக வந்ததா இல்லை வீரம் மற்றும் மக்கள் செல்வாக்கால் பட்டம் பெற்ற பல பலரைப் போல தீரன் சின்னமளையும் புதிதாக பட்டம் எற்றாரா என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. திருமணம் முடித்து வாரிசுகள் இருந்தால்தான் பட்டாபிஷேகம் செய்யமுடியும் என்ற விதியின்படி, தீர்த்தகிரி சர்க்கரை மன்றாடியாரின் வாரிசுகள் இன்றும் உள்ளனர் என்பது செய்தி. ஆனால் அந்த வாரிசு யார் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.




• சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் சின்னமலை என்பதும் செவிவழி செய்தியே. தீர்த்தகிரி சின்னமலை என்று அழைக்கப்பட்ட இன்னொரு காரணம், அரச்சலூர் மலை முருகன் பெயர் தீர்த்தககுமாரசாமி. அவர்போருட்டுதான் சின்னமளைக்கும் தீர்த்தகிரி என்று பெயர் சூட்டப்பட்டது. பட்டக்காரரை பெயர் சொல்லி குறிப்பிடக்கூடாது, எனவே சிவன்மலை சென்னிமலை உள்ள கொங்கு சீமையில் சின்னமலை ஆன அரச்சலூர் மலையை குறிக்க வந்த பெயர்தான் இது. இதுவும் கூட செவி வழி செய்திதான்.

• பூந்துறை நாட்டைச் சேர்ந்தோர் தான் தீர்த்த்கிரிக் கவுண்டரை காப்பாற்றினார்கள் என்பதும் ஆதாரமற்றதும், செவிவழிச் செய்தியுமாகும்.
ஆடி 18 அன்று தூக்கில் போடப்பட்டதற்கும் வரலாற்று சான்றுகள் இல்லை. அதுவும் செவி வழி செய்தியே. 


தீரனின் போராட்ட நோக்கம்:

தீர்த்தகிரி சர்க்கரை கவுண்டரின் காலத்தில் தீரன் வேலுத்தம்பி போன்ற சக போராளிகள கடித போக்குவரத்து, கைபீதுகள் மூலமாக அவர்களின் போராட்ட நோக்கங்களை அரிய முடிகிறது. அவை,

•யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர தேசமாக தங்கள் மண்ணை பூர்வகுடிகளே ஆள வேண்டும் என்பது. தீர்த்தகிரி கொங்குநாட்டை யாரின் கட்டுப்பாட்டுக்கும் உட்படாத சுதந்திரபூமியாக இருக்க விரும்பினார். வெள்ளையன் உட்பட, மைசூர் சுல்தான்களை முதலில் எதிர்க்கவும் இதுவே கரணம்.

•அன்னியர் தங்கள் நாட்டுக்குள் வந்தால் தங்கள் பெண்கள் கற்பு சூறையாடப்பட்டு பூர்வகுடிகளின் குலம் அழியும். சமூக இன கலப்பு ஏற்பட்டுவிடும். அதற்கு இடங்கொடாமல் இருக்க.

•தங்கள் உயிர் போன்றதும் பாரம்பரிய வரலாற்று ஆன்மீக மையங்களான கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்டு, அதன் புராதனம்  சிதைக்கப்படும். அதை தடுக்க

•தங்களின் பசுக்கள் கொல்லப்படும், கொள்ளையடிக்கப்படும். ஒரு நாட்டின் பெண்கள், கோவில்கள், பாதுகாப்பு, பசுக்கள் போன்றவற்றிற்கு அரசனே காவலன். அந்த தர்மத்தின் அடிப்படையில்.

இந்த தினத்தில் கவுண்டர்கள் செய்யவேண்டியது?

•ஒவ்வொரு வீட்டிலும் தீர்த்தகிரி கவுண்டர் படம் மாட்டப்பட்டு, குடும்ப அளவில் அவர் வணங்கபடுவது நம் சமூக வழக்கமாக வேண்டும். குழந்தைகளுக்கு அவரின் வரலாற்றோடு நம் சமூக பெருமைகளையும் சொல்லி தருவதால் அவர்கள் தவறு செய்ய மாட்டார்கள்.

•அவரின் உன்னத நோக்கங்கள் நிறைவேற வேண்டும். மிக முக்கியமாக கொங்குநாடு தனி மாநிலம்.

•அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நம் கோவில்களை மீட்க வேண்டும். வெள்ளையன்/இஸ்லாமியர் அன்று நம் கோவில்களுக்கு செய்த அக்கிரமங்களை இன்று அறநிலையத்துறை செய்கிறது. கோவில் சொத்துக்கள் வீணடிக்க/கொள்ளையிட படுகிறது. கோவிலின் புராதனம், கல்வெட்டு போன்றவை சிதைக்கப்பட்டு பழமையான சிலைகள், தூண்கள் புனரமைப்பின்பேரில் கடத்தபடுகின்றன. அதை நிறுத்த கோவிலின் முக்கியத்துவம் உணர்ந்து இளம் தலைமுறை கோவில் நிர்வாகத்தில் பங்கெடுக்க வேண்டும்.

•நாமக்கலில் சில கவுண்டர்கள் வெக்கமே இல்லாமல் பசுக்களை கடத்த வண்டி அனுப்பி சம்பாதிக்கிறார்கள். நம் கொங்கு நாட்டு பசுவினங்களை காக்க வேண்டும். பசுக்களை கடத்த வண்டி தராமல் இருப்பதோடு, கடத்துபவர்கள லாரிகளை மடக்கி கடுமையாக தண்டிக்க வேண்டும்.பஞ்சாபில் செய்வது போல. (குறிப்பு: பசுக்கள் வண்டியில் கொண்டுபோதல் சட்டப்படியும் குற்றம்)

•நம் பெண்கள் பிற சாதி-மதத்தவரோடு திருமணம் செய்வதை தடுக்க வேண்டும். அதற்க்கு நம் சமூக மரபுகளை சிறு வயது முதலே சொல்லித்தந்து பின்பற்ற செய்ய வேண்டும். குல தெய்வங்கள், குலங்கள், குருக்கள், விவசாயம், பசுக்கள், பட்டக்காரர்கள் நம் குடிகள் போன்ற விஷயங்கள் அவர்களுக்கு போதிக்கப்பட வேண்டும். கொங்கு நாட்டின் வரலாறு, புவியியல், சமூக கல்வி போன்றவை அனவைரும் அறிந்திருக்க வேண்டும்.

அரசுக்கு கோரிக்கைகள்:

•தீரன் சின்னமலை வரலாறு பாடப்புத்தகத்தில் இடம் பெற வேண்டும்.

•தீரனாரோடு சேர்ந்து தியாகம் செய்த அனைவரின் வரலாறும், படங்களும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு மணிமண்டபத்திலும் அனைத்து அரசு நூலகங்களிலும் வைக்கப்பட வேண்டும்.

•கொங்கு நாட்டை சேர்ந்த ஊட்டி வெலிங்டன் ராணுவ மையத்தில் கட்டபொம்மன் சிலை வைத்தது போல, கோவை போலிஸ் பள்ளியிலும், அமராவதி சைனிக் பள்ளியிலும் தீரனார் சிலை வைக்கப்பட வேண்டும்.

•கொங்கு மக்களின் கோரிக்கையான கொங்கு நாடு தனிமாநிலம், அறநிலையத்துறை அபகரித்த எண்கள் பாரம்பரிய கோவில்கள போன்றவற்றை எங்களுக்கு திரும்ப தந்துவிட வேண்டும்.

•பசுக்களை கடத்துவோரை தடுத்து கடுமையாக தண்டிக்க வேண்டும்.

•பிற சாதி பெண்களை காதல் என்று நாடகமாடி சொத்து பறிக்கும் கும்பல்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். அதற்க்கு ஆயுதமாக பயன்படுத்தப்படும் வன்கொடுமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates