Trending

Thursday 29 August 2013

கொங்கு நாட்டின் பாரம்பரிய கிரகபிரவேசம் - புண்யார்ச்சனை முறை

கொங்கு நாட்டின் பாரம்பரிய கிரகபிரவேசம் - புண்யார்ச்சனை முறை:



வீடு கட்டி முடித்து கிரகபிரவேசம் செய்யும் தினத்தின் முந்தைய இரவில் கொங்கு குலாலரை (குயவர்-கொசவர்) அழைத்து கெடா பலி கொடுத்து வீட்டை சுற்றி இழுத்து வர வேண்டும் (அதன் இரத்தம் வழிய வேண்டும்). இது கறுப்பு சக்திகள் அண்டாமல் இருக்கவும் திருப்திசெய்யவே ஆகும். இன்று நீர்பூசணியை சிகப்பு வர்ணம் கலந்து மூலைக்கு மூலை உடைத்து போடுவது பலிக்கு மாற்றாக செய்யப்படுவதே ஆகும். கெடாவினை நம் குடி சாதிகளுக்கு பிரித்தளிக்கலாம். பாரம்பரிய கொங்கு குலாலர்கள் மாமிசம் உண்ண மாட்டார்கள் (தற்காலத்தில் சிலர் மாறிவிட்டிருக்கலாம்). இந்த சாங்கியம் கொங்கு குலாலரின் உரிமையாகும். பாரம்பரியமான குலாலர் இதை நன்கு அறிவார்கள்.



கெடா பலி முடிந்த பிறகு, கொங்கு ஆசாரி (அந்த வீட்டுக்கு வேலை செய்தவர் அல்லது ஊர் ஆசாரி) அழைத்து வாஸ்து சாந்தி செய்ய வேண்டும். பாரம்பரிய ஆசாரிகள் நன்கு அறிவர். கொங்கு ஆசாரிகள் தேவர்களின் எஞ்சிநீயரான விஸ்வகர்மாவின் வழி வந்தவர்கள். அவர்களும் பாரம்பரியமாக சைவ உணவு பழக்கமும் பூணூலும் அணிவர் (இன்று சிலர் மாமிசம் உண்ணுகிறார்கள்). வாஸ்து சாந்தி செய்து முடித்த பிறகு காலையில் கிராமத்தின் உள்ளூர் கோவில் குருக்களை அழைத்து புண்ணியார்ச்சனை செய்யப்பட வேண்டும்.



வீட்டுக்குள் பசுவை அழைத்து வருவது முக்கிய சடங்கு. நாட்டு பசுவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சீமை மாடுகள் [பன்றிகள்] பயன்படுத்த கூடாது. கன்றுடனான நாட்டு பசுவை அலங்கரித்து வீட்டுக்குள் அழைத்து வந்து அதற்கு தூப தீபங்கள் காட்டி உண்ண பழம், கீரை தர வேண்டும். இது வீட்டிற்கு மங்களம் ஏற்ப்படுத்தும் சடங்கு மட்டும் அல்ல; பசு நம் குடும்பத்தின் அங்கம என்பதை விளக்கும் சடங்காகும். பால் காய்ச்சுவதை தொடர்ந்து, அதன் பின்னர் தற்போது உள்ளதுபோல நாம் செய்ய விரும்பும் சடங்குகளை செய்யலாம். மேலே சொன்னவை இன்றியமையாதவை. இவற்றை விடுத்து தமிழ் முறையில் செய்கிறேன் என்று கிறுக்குத்தனமாக பாரம்பரிய முறைகளை தொலைத்துவிட வேண்டாம்.




(குறிப்பு: புண்ணியார்ச்சனை என்பது கொங்கு சமூகம் காலம் காலமாக பயன்படுத்தி வரும் வட்டார சொல்லாக உள்ளது. அதை விடுத்து தற்போது புது மனை புகு விழா என்று புதிதாக வார்த்தைகள் கண்டுபிடித்து பயன்படுத்துவது மிக தவறானது. புது மனைக்குள் என்றோ நாம் நுழைந்து விடுகிறோம். இந்த விழாவில் செய்யப்படுவது வீட்டிற்கு செய்யப்படும் சடங்குகளே. அதற்கு பொருத்தமானதும் பாரம்பரியமானதும் புண்ணியார்ச்சனை என்னும் பெயர்தான்)

3 comments:

  1. அவனுங்க முற்போக்கு அண்ட் டுமீல் குரூப் ங்க மாப்ளை..

    ReplyDelete
  2. முற்போக்கு என்றால் என்னங்க ?

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates