Trending

Saturday 31 August 2013

ஸ்ரீரங்கமும் கொங்கு வெள்ளாளர் பக்தியும்

கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் ரொம்ப காலமாக வருடந்தோறும் ஸ்ரீரங்கம் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் இஷ்ட தெய்வங்களில் ஒரு கடவுளாக இருந்தது உண்மை.
  • ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மூலவர் சிற்பமானது, விபீஷனருக்கு ஸ்ரீராமர் அன்பின் காரணமாக தான் வழிபட்டு வந்த சாலகிராம ரங்கநாதராகும். ஸ்ரீராமருக்கு ரங்கநாதரே குலதெய்வம் என்பது பெரியோர் கருத்து. சூரிய வம்சத்தின் குலதெய்வம் ரங்கநாதர் என்பது அரிய செய்தியாகும்; காரணம் நாம் சூரிய வம்சத்தின் கிளையான கங்கா குலத்தோர்! 
  • வெள்ளாள அரசனான சோழன் தர்மவர்மன் என்போன் ரங்கநாதர்  மேல் அளவிலா பக்தி கொண்டவனாவான். கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்தவன். அவன் பேராலே ஸ்ரீரங்கத்தின் முதல் சுற்று "தர்மவர்ம சுற்று" என்று அழைக்கப்படுகிறது.
  • கன்னிவாடி கன்னகுல பட்டயத்தில் பட்டக்காரர் மும்முடி முத்துச்சாமி மன்றாடியார் குழந்தை இல்லாமல் மன வருத்தமுற்று இருந்த காலத்தில், அவரது கனவில் தோன்றிய ஸ்ரீ நல்லநாயகியம்மன், ஸ்ரீரங்கம் சென்று தன் அண்ணனை தரிசித்து வருமாறு சொல்லியுள்ளார். அதன் பொருட்டு ஸ்ரீரங்கம் சென்று வந்த முத்துசாமி கவுண்டருக்கு ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் பிறந்தது. சீரங்கராய கவுண்டர் என்றும் சீரங்காயி கவுண்டச்சி என்றும் பெயரிட்டார். இன்றளவும் (கன்னிவாடி) தலைய நாட்டு பட்டக்காரர் குடும்பத்தில் ரங்கநாதர் பெயரை சூட்டும் வழக்கம் இருந்து வருகிறது. தற்போதைய கன்னிவாடி பட்டக்காரர் தனது மகளுக்கு ரங்கநாயகி என்றே பெயரிட்டுள்ளார்.
  • ஈங்கூர் ஈஞ்ச கூட்ட காணியாச்சியான தம்பிராட்டியம்மன் கோவில் ஸ்தல வரலாற்றில் வருடா வருடம் ஸ்ரீரங்கம் சென்று வந்த வழக்கம் குறிக்கப்பட்டுள்ளது.
  • திருசெங்கோட்டு பகுதியில் காரி கூட்டத்தவர் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு வருஷந்தோறும் ஸ்ரீரங்கம் செல்வது வழக்கம்
  • பயிர கூட்டத்தவர்களில் ஒரு பிரிவினர் தங்கள் குடும்ப மூத்த குழந்தைக்கு ரங்கசாமி (அ) ரங்கம்மா என்ற பேர் வைத்து முதல் மொட்டை ஸ்ரீரங்கத்தில் அடிப்பது மரபாக உள்ளது.
  • கொங்கு நாட்டின் பாசூர் மடத்திற்கு கணக்கிலடங்கா சொத்துக்கள் இருந்தன (ஒரு காலத்தில்!). இன்று திருச்சியில் இருக்கும் சத்திரம் பேருந்து நிலையம் என்பது பாசூர் மடத்தின் சார்பில் கொங்கு நாட்டில் இருந்து ஸ்ரீரங்கம், சிதம்பரம், திருவானைக்கா உள்ளிட்ட கோவில்களுக்கு ஸ்தல யாத்திரை வரும் கொங்கு நாட்டு பக்தர்களுக்காக சித்திரமாக இயங்கி வந்ததாகும்.
  • இன்றளவும் சீரங்கன், ரங்கசாமி போன்ற பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டி வருவது மரபாகும்.




3 comments:

  1. காஞ்சி மகா பெரியவா3 December 2015 at 22:46

    ராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றுவதில் ரொம்பப் பொருத்தமுண்டு. என்னவென்றால்: ஸ்ரீரங்கநாத விக்ரஹந்தான் ராமர் அவதரித்த இக்ஷ்வாகு வம்ச ராஜாக்களின் குலதெய்வம். ராமரும் வனவாஸம் முடித்துத் திரும்பியவுடன் அதற்குத்தான் பூஜை பண்ணினார். தொடர்ந்தும் பண்ணியிருப்பார். ஆனால் அவருடைய தயாள குணத்தினால், ஸ்நேஹ பாவத்திலே பிறந்த தியாகத்தினால், பட்டாபிஷேகம் பார்த்துவிட்டு விபீஷணர் லங்கைக்குத் திரும்பினபோது, அவருக்கு ரொம்பப் பெரிய gift-ஆக ஒன்று கொடுக்க வேண்டுமென்று நினைத்து, இக்ஷ்வாகு குல தெய்வமும், குலதனமுமான ரங்கவிக்ரஹத்தையே கொடுத்து விட்டார்! விக்நேச்வரர்தான் புண்யம் கட்டிக்கொண்டு ‘ட்ரிக்’குகள் பண்ணி, அது இந்தியாவை விட்டுப் போகாமல் ஸ்ரீரங்கத்திலே இருக்கும்படியாகப் பண்ணினார்.

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates