Trending

Tuesday 5 August 2014

காணியாளர் பழனி மங்கள கவுண்டர் (1896-1963)

பழனி நம் கொங்கதேசத்தின் 24 நாடுகளில் வைகாவூர் நாட்டை சேர்ந்த கோயில். இந்த நாட்டின் பட்டக்காரர் பழனி ஈஞ்ச கூட்டத்தார் ஆவர். இந்த ஈஞ்ச கூட்டத்தின் ரகுநாதசிங்க கவுண்டர் கொங்கு வரலாற்றில் மிகவும் புகழ் பெற்றவர். கொங்கதேசத்தில் குறும்பு செய்த வடுகர்களின் எண்பத்தெட்டு காணிகளை வென்று கொங்கு வெள்ளாளர்களின் வெற்றிக்கொடியை நாட்டியவர். பழனி கோயிலில் இவரின் வம்சா வழியினருக்கே என்றும் முதல் மரியாதை இருந்து வந்தது. அறநிலையத்துறை கோயிலை ஆக்கிரமித்த பின்னர் பாரம்பரிய மரபுகளை கொஞ்சம் கொஞ்சமாக சீரழித்து விட்டனர். இன்றளவும் பழனி பகுதியில் காணியாளர் குடும்பம் என்றால் பெருத்த மரியாதை உண்டு.
S.G.பாலகிருஷ்ணன்.MP.,காணியாளர் மங்கள கவுண்டர் மற்றும் ராஜாஜி அவர்கள்
=========================================================================
பழனித்தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினர் (1952-57).
பழனி ஆலய அறங்காவலர் (1926-1928)
அறங்காவலர் குழுத்தலைவர்(1947-1957)
பழனி நகர்மன்றத் தலைவர் (1926-29,1931-34,1952-59)

கொத்தயம் கிராமத்தில் பிறந்த விவசாயி. பழனியில் வாழ்ந்தவர். பழனி மக்கள் அன்பாக காணியாளர் என்றே அழைப்பார்கள்.1952 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி செல்வாக்கு
இல்லாதவர் என்று சொல்லி சீட் தரவில்லை.சுயேட்சையாக நின்றார்.எதிர்துப் போட்டியிட்ட மதுரை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.கே இலட்சுமிபதிராஜை விட 15 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தமிழ் நாட்டிலேயே முதல் இடத்தில் வெற்றி பெற்றார். ராஜாஜி முதல்வரனார்.அவரை பழனிக்கு அழைத்து வந்து பழனி தாலூக்காவிற்கு வேண்டிய அனைத்துத் திட்டங்களையும் பெற்றார்.1926 ல் நகர்மன்றத்தலைவராக இருந்தபோது அப்போதைய முதல்வர் Dr.ப.சுப்பராயனை பழனிக்கு வரவேற்று கொடைக்கானல் கூட்டூக் குடிநீர் திட்டம் பெற்றார்.பழனிக்கு முதலில் மின்சாரம் கொண்டு வந்தார்.பழனி மலைக்குபடிகள் அமைத்து,மண்டபங்கள் கட்டி,யானைப்படி அமைத்து,தாலூக்கா முழுவதும் சாலை, குடிநீர், பள்ளிகள் போன்ற அனைத்தும் பெற்றுத்தந்தார்.1954லிலிருந்து காமராசரின் உற்ற நண்பர். பசும்பொன்முத்துராமலிங்கத் தேவருக்கு மிக வேண்டியவர் அரசு தாராபுரம் சாலையில் நடத்திவரும் சிறப்புக் காவல்படை முகாமிற்கு தேவையான நிலம் 40 ஏர்ம், பழனி நகராட்சிக்கு பெரியப்பா நகரில் 5 ஏர் நிலமும் இலவசமாககொடுத்தார். பழனியில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் இன்றும் முதல்மரியாதை காணியாளர் குடும்பத்திற்குத்தான்.


முத்தூர் சேரன் கூட்டத்தை சேர்ந்த திரு S.K.கார்வேந்தன் அவர்கள் முகநூல் பக்கத்தில் இருந்து.

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates