Trending

Sunday 31 August 2014

காட்டு காவல் தெய்வ மகிமைகள்

எங்க தோட்டத்துல அரசமரத்து அய்யன் அப்படின்னு ஒரு கருப்பராயன் தோட்டத்து சாமியா இருக்கு. எங்களோட நல்லது கெட்டது எல்லாத்துக்கும் நாங்க போயி நிக்கறது இந்த கருப்பன் கிட்ட தான்.. எங்க அப்பாவோட அப்பாரு காலத்துல நடந்த சம்பவம்...

அது ஒரு பஞ்ச காலம்.. ஊருல இருக்கற குடிபடைகள் எல்லாம் கொஞ்சம் பஞ்சத்துல இருந்தாங்க. 

அப்போ எங்க தோட்டத்துல எங்க அப்பாரு ராய்(அதாவது கேழ்வரகு. ராய்'னு கூகுள்'ல தேடுனா கூத்தாடி லட்சுமி ராயும், ஊர ஏமாத்துன சஹாரா குழும சுப்ரதா ராயும் தான் வருவாங்க) வெதச்சு வெள்ளாமை வெச்சுருந்தாறு. ராய் தாலு நல்லா வளந்து பாலேறி கருது முத்திப் போயி அறுக்கற பக்குவத்துல இருந்துச்சு.

அப்ப பஞ்ச காலம்ங்கரதால எங்க மாதாரிக ரெண்டு பேரு போயி கவண்டனுக்கு தெரியாம கொஞ்சம் ராய் திருடிட்டு வந்தராலாம்னு நடுராத்திரில காட்டுக்குள்ள எறங்கி ராய் தாழ கைல புடுசுருக்கரானுங்க.. புடுச்சவனுங்க தான்.. அப்படியே ராய் தாழ கைல புடுச்சது புடுச்ச படியா சிலை மாதிரி ஆயுட்டானுங்க..




                                               

இங்க ஊருக்குள்ள பாத்தா நம்ம ஊரு கொத்துக்காரரு காத்தால இருந்தது வேல செஞ்ச சலுப்புல கஞ்சிய குடுச்சுட்டு கோழி கூப்பட கவல ஓட்ட(கவலை ஓட்டுதல் - ஏற்றம் இறைத்தல்) போகணுமே'னு நல்லா தூங்கறாரு. நல்லா தூங்கறயா பாட்டாளி.. தூங்கு அப்படின்னு நெனச்சுட்டு முதுல சுளீர்'னு ஒரு அடி உலுந்துச்சு.. இதார்ரா நம்மள இந்நேரத்துல அடிக்கரத்துன்னு அந்தக்கடை திரும்பி படுத்தாரு.. மறுபடிமு சுளீர்'னு முதுகுல ஒரு அடி.. கொத்துக்காரருக்கு தூக்கம் தெளிஞ்சு போச்சு.. எந்திருச்சு உக்காந்தாரு.

"அங்க தோட்டத்துல வெதச்ச வெள்ளாம களவு போவுத்து.. உனக்கு தூக்கமா"னு ஒரு குரல் கேக்குத்து. இதென்னடா வம்பா போச்சுன்னு அரிக்கேன் லைட்ட பத்த வெச்சுட்டு தோட்டத்துக்கு கெளம்புனாரு..

அது இருக்கும் தோட்டத்துக்கும் ஓட்டுக்கும் ஒரு மைலு. என்னாச்சோ ஏதாச்சோன்னு ரோசுனை பண்ணிட்டே வந்தாரு. 

இங்க வந்து பாத்தா உள்ளூரு மாதாரி ராய் தாழ புடுச்சுட்டு சிலை மாதிரி நிக்கறானுங்க.. பேச்சும் இல்ல.. மூச்சும் இல்ல.. 

"அட கருப்பா.. இவனுங்க திருடுனானுங்கன்னு தான் என்னைய எழுப்புனையா? உனக்கு வேற ஆளே கெடைக்கலையா.. இவனுங்கள இப்படி தண்டுச்சுட்டயே" அப்படின்னே சொல்லிட்டே "அரசமரத்து அய்யா இவனுங்கள மன்னிச்சு உட்ரு'னு சொல்லி கும்புட்டுட்டு தொட்டத்துல ஒரு கை மண் அள்ளி சிலை மாதிரி நின்னவனுங்க மேல போட்டாரு.. ரெண்டு பேரும் நல்ல போச்சு.

சேரிச் சேரி..கருப்பன கும்புட்டுட்டு வாங்கடான்னு சொல்லிட்டு அவனுங்கள ஊட்டுக்கு கூட்டிட்டு வந்து படுக்க சொல்லிட்டாரு.

காத்தால தூங்கி எழுந்திரிச்சு திரு திருன்னு முழிக்கரானுங்க திருட வந்த ரெண்டு பேரும்.. கொத்துக்காரர் ஒன்னும் சொல்லல.. சம்சாரத்த கூப்டாரு.. அட இவனுங்க ரெண்டு பேருக்கும் சோறு வேவுச்சு வவுறு நம்ப திங்க வரைக்கும் போடுன்னு சொன்னாரு.. அவனுங்க நல்லா சாப்பட வரைக்கும் உக்காந்து பாத்துட்டு இருந்துட்டு ஆளுக்கு நாலு வல்லம் ராய் கொடுக்க சொல்லிட்டு துண்ட ஒதறி தோள்ல போட்டுட்டு தண்ணி கட்ட தோட்டத்துக்கு போயிட்டாரு..

அன்னைல இருந்தது தோட்டத்துல திருடனும்னு நெனச்சு ஒருத்தனும் வந்தததும் இல்ல.. வெள்ளாம வெளச்ச்சலும் கொரஞ்சதும் இல்ல.. எல்லாம் அந்த கருப்பனே பாத்துக்கறான்!

இந்த பஞ்ச காலம் பற்றிய தொடர்புடைய பதிவு கொங்கப்பறையர்கள் கட்டுரையில் தெளிவாகக் காணலாம்.

-வணங்காமுடி மாவீர முத்தூர் மணியன் கூட்ட ஸ்ரீமான் சந்திரசேகர கவுண்டர்

----

இன்னைக்கு காலைல எங்க அமத்தா வீட்டுக்கு போயிட்டு வந்தேன்..... இது அங்க தோட்டத்துக்குள்ள இருக்கற காவல் தெய்வம் முனியப்பன்.... ரொம்பவே சக்திவாய்ந்த துடியான தெய்வம்..... இது வரைக்கும் இந்த தோட்டத்துக்குள்ள வந்து எவனும் ஒரு தேங்காயை கூட எடுத்துட்டு போக முடியாது.... பொதுவாக இந்த மாதிரி முனி எல்லாம் இரண்டும் ஆண் உருவங்களா தான் இருக்கும்.... ஆனால் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் இந்த மாதிரி ஒரு அமைப்பு காண்பது அரிது.... மிக சில இடங்களில் மட்டும் தான் காண முடியும்.....

அவிநாசி வட்டத்துல ராயர்பாளையம்னு ஒரு ஊரு இருக்குது. இந்த பகுதில சில கூலிக்கார பசங்களுக்கு சாராயம் காச்சறது அப்புறம் திருட்டு தொழில் ரெண்டும் தான்... பாவம் பஞ்ச காலம்.. ஒரு தடவை தோட்டத்துல வெள்ளசோளம் வெதச்சு தட்டு வெளஞ்சு நல்லா கருது மினிங்கி அறுத்து ஊனியிருந்ததாம். இது தெரிஞ்சவனுங்க ஒரு பத்து பேரு ராத்திரி நேரம் கருது திருட வந்தானுகளாம். வந்து தட்டுல கைய வெச்சு ஒரு கருத அறுத்து மடியில போடப்போன கை அப்படியேவும், சோளத்தட்ட புடிச்ச கை அப்படியேவும் இருக்க, சுய நினைவு இல்லாம அப்படியே நின்னுட்டாங்களாம். அடுத்த நாள் பொழுது வெடிஞ்சு எல்லாரும் காட்டுக்கு வந்த இவனுக எல்லாம் அப்படியே நிக்கறாங்க. அப்புறம் போயி சாமிய கும்பிட்டு தீர்த்தமும், விபூதியும் கொண்டு வந்து தெளிச்ச பிறகு தா சுய நினைவு வந்ததாம். கண்ண முழிச்சு பாத்து எல்லாரு கால்லயும் உழுந்து கும்பிட்டு, கோயிலுக்கு வந்து சாமிய கும்பிட்டு மன்னிப்பு கேட்டு, இனி எத்தனை தலைமுறை ஆனாலும் நாங்க இந்த தோட்டத்துக்குள்ள வந்து எதையும் தொட மாட்டோம் னு சத்தியம் பண்ணி குடுத்துட்டு போனாங்களாம். அது முதல் ராயர்பாளைத்து காரனுக எவனும் உள்ள வர மாட்டான்.




- பிடாரியூர் பொருள்தந்த கூட்ட ரமேஷ் துரைசாமி கவுண்டர்

---

ஈரோட்டில் இன்னைக்கும் சித்தோடு ரோட்டுல தண்ணிபந்தபாளையம் பக்கத்துல தோட்டக்காடு இருக்குது. அங்க இருக்கற கருப்பண்ணன் மிகவும் சக்தி வாய்ந்தவர். ஒருக்கா குறவன் ஒருவன் வெள்ளாமை திருடிட்டு போக வந்துட்டு வெள்ளாமைய தொட்டதியும் கண் பார்வை போயிட்டுது. அங்கேயே மயங்கி கிடந்தவனை விடிஞ்சதும் தேவேந்திரன் கூட்டத்து மாமன் கூட்டம் போய் தூக்கிட்டு வந்து முத்தி முதின்னு முதிச்சு முடுக்கியுட்டிருக்காங்க.

அப்பிச்சி ஒருக்கா குடும சண்டைல விரக்தியாவி தூக்கு மாட்டிக்க போயிட்டாராம். தோட்டகாட்டுல அப்பிச்சியோட அம்மா மாடு மேச்சிகிட்டு இருந்தப்ப அவங்க கண்ணு முன்னால படம் போட்டு காட்டுனாப்பல அப்பிச்சி தூக்கு மாட்ட போறது தெரிஞ்சிதாம். மாட்டை அங்கேயே கட்டிப்புட்டு ஓட்டோட்டமா ஓடி ஊடு வந்து பாத்தா அப்பிச்சி தூக்கு மாட்டினது மாட்டுனாப்பல விருமத்தி புடிச்சாப்ல நின்னாராம். அப்படியே காப்பாத்தி தண்ணி தெளிச்சு திண்ணீர் இட்டுவுட்டு கேட்டா கவுத்த மாட்டுனப்புரம் என்ன ஆச்சுன்னு தெரில னு சொன்னாராம்.

இன்னிக்கும் கருப்பராயன் கோயில் கெவுளி வாக்கு அவ்வளவு சரியா பலிக்குமாம்.

- மண்டபத்தூர் கன்ன கூட்ட அத்தப்ப கவுண்டர்






No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates