Trending

Friday 29 August 2014

சம்ஸ்க்ருதம் தமிழின் சகோதர பாஷை



தமிழ் நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ள வரலாற்று சின்னங்களில், பிராகிருதம், பிராமி, தமிழ் பிராமி, தமிழ் வட்டெழுத்து, கிரந்தம், கிரந்தத் தமிழ், மணிப்பிரவாளம், தேவநாகரி போன்ற பல எழுத்து நடைகள் காணப்படுகின்றன. சம்ஸ்க்ருத மொழியைக் காட்டிலும், தமிழ்மொழி சார்ந்த குறிப்புகள் அதிகம் காணப்படுவதால், தமிழ் இலக்கியங்களில், சம்ஸ்க்ருத மொழியானது, வடமொழி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும்,
இவ்விரு மொழிகளுக்கு இடையே ஆரோக்கியமான பரிவர்த்தனைகள் இருந்துள்ளன என்பது, திருக்குறள், ஆத்திச்சூடி, கம்ப ராமாயணம் போன்ற இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள சொற்கள் மற்றும் பாடல் வரிகள் மூலம் நிரூபணமாகின்றது. பண்டைக் காலப் படைப்புகளில் சில வடமொழிச் சொற்களும் மத்திய மற்றும் நவீன காலப் படைப்புகளில் பல வடமொழிச் சொற்களும் காணப்படுகின்றன. செய்யுள் இயற்றலில வடசொற்களும் பயன்படுத்தப்படும் என்பதை தொல்காப்பியம் சொல்கிறது..


""இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.""" 
என்றும்...

வடசொற்களை எழுத்து வடிவை தவிர்த்து ஒலிவடிவை பயன்படுத்திக் கொள்வதை
” வடசொல் கிளவி வடஎழுத்து ஒரீஇ,
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.
சிதைந்தன வரினும், இயைந்தன வரையார்” (சொல்: 5 :6)""
என்றும் இலக்கண வரையறைகள் சொல்கிறார்... 

இதன்மூலம் வடசொற்கள் ஒலிகள் அக்காலம்தொட்டே வழங்கிவரப்பட்டமை அறியலாம்.. எனவே, சம்ஸ்கிருத சொற்கள், பெயர்கள் மட்டுமின்றி பிராமி, பாலி, கிரந்தம் போன்ற சொற்களும் நம்முடன் கலந்திருப்பதையும் காண்கிறோம்.

குறிப்பு: இந்த தகவல்கள் முத்திப்போன திராவிட கோமாளிகள் புத்தகங்களில் இருந்த செய்திகளைக் கொண்டே தேடத் துவங்கி கண்டறிந்தது. சில திராவிட கோமாளிகள் தொல்காப்பியத்தையே ஆரிய நூல் என்றனர். ரண்டாயிரம் வருஷம் முன்ன வந்தது ஆரிய வேற்று மக்களாம்.. அட லூசு, இன்று ஆதி தமிழன் னு சொல்லிக்கற பல பயல்கள் அதுக்கப்புறம் தான இங்க வந்தான்; அவனெல்லாம் மண்ணின் மைந்தன் னு சொல்லிகும் போது (உங்க நியதிப்படி ஆரிய-திராவிட புளுகுமூட்டை உண்மையாகவே எடுத்துக் கொண்டாலும்) ரெண்டாயிரம் வருஷம் முன்ன வந்தவர்கள் எப்படியப்பா வந்தேறிகள் ஆவார்கள் என்றால் ஓடி ஒளிகிறார்கள்.

இன்று நாம் இப்போது சுத்தத்தமிழ் என்று பேசி எழுதி வருவது கிறிஸ்தவ பாதிரியார்களும், துபாஷிகளும் உருவாக்கியது. இவற்றை வைத்து சங்ககால உரைநடைகள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள், இலக்கியங்கள், காவியங்களை புரிந்துகொள்ள முடிவதில்லை. தமிழ் என்ற ஒற்றை மொழி அடையாளம் இல்லை. செந்தமிழ் கொடுந்தமிழ் என்றும். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் வட்டார மொழிகளும் உண்டு. அப்படி வட்டார மொழிகளாய் உருவானவை தான் மலையாளம், தெலுகு, கன்னடம் போன்றவை. மொழிவாரி மாநிலப்பிரிப்புக்கு பின்னர் அவரவர் இன அடையாளத்தை மறைத்து மொழிவெறியை பள்ளிக் காலம் முதல் ஊட்டி மொழிவாரி இன அடையாளத்தை உருவாக்கி வருகிறார்கள். இது வேறு அரசியல்.

குறிப்பு: இங்கே தமிழ் என்று சொல்லப்பட்டது நமது கொங்கதேசத்தை பொறுத்தமட்டில் காங்கி என்று எடுத்துக்கொள்ள வேண்டும். காங்கி நமது வட்டார மொழி. கொங்கதேசத்தின் தாய்மொழி. தமிழால் விழுங்கப்பட்டு மறக்கடிக்கப்பட்டு தனது அடையாளத்தை இழந்துவரும் மொழி.

thanks: www.Sanskritroots.com


1 comment:

  1. காங்கியா? - அதுவும் தமிழ்! செந்தமிழா? - அதுவும் தமிழ்! கொடுந்தமிழ் செந்தமிழ் என்ற வேறுபாடு வழக்கத்தினால் வருவது. இரண்டும் ஒரு தமிழே! குழப்பம் வேண்டாம்.

    "இன்று ஆதி தமிழன் னு சொல்லிக்கற பல பயல்கள் அதுக்கப்புறம் தான இங்க வந்தான்; அவனெல்லாம் மண்ணின் மைந்தன் னு" - உண்மை!

    "மொழிவாரி மாநிலப்பிரிப்புக்கு பின்னர் அவரவர் இன அடையாளத்தை மறைத்து மொழிவெறியை பள்ளிக் காலம் முதல் ஊட்டி மொழிவாரி இன அடையாளத்தை உருவாக்கி வருகிறார்கள். இது வேறு அரசியல்." - புரிந்தால் சரி.

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates