Trending

Monday 11 August 2014

ஆழ்துளை சமவெளி கிணறு கட்டுப்பாடுகள்

ஆழ்துளை கிணறு சம்பந்தமாக நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்டத்திருத்தம் குறித்து வாக்குவாதங்கள் வலுத்து வருகின்றன. முதலில் இந்த சட்டத் திருத்த மசோதா என்னவெல்லாம் சொல்கிறது என்று பார்ப்போம்,

சட்டத்திருத்தம் கொண்டு வந்து புண்ணியம் செய்த பு.தலைவி மற்றும் கோவை தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி 

1.       சட்டத்திருத்தத்தின் மூல காரணம், தற்போது குழந்தைகள் ஆழ்துளை கிணறுகளில் விழுந்து இறக்கும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.

2.       இனிமேல், ஆழ்துளை மட்டுமல்ல சமவெளி கிணறுகள் தொண்டவும்
இனி அரசாங்க அனுமதி பெற வேண்டும்.

3.       ஆழ்துளை மற்றும் சமவெளி கிணறுகள் தோண்டும் தொழில் செய்பவர்கள் அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும்.

4.       அனுமஹ்டியின்றி கிணறு வெட்டும் நில உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தண்டனை-அபராதத்துக்கு உட்படுவார்கள்.

சரி, இதனுள் கவனிக்க வேண்டியது என்னென்ன,

1.       முதலில் கிணறுகளும் ஆழ்துளை கிணறுகளும் ஒன்றிரண்டு ஆண்டுகளாக மட்டும்தான் இருக்கிறதா? இதற்குமுன் இவை இல்லையா, விபத்துகள் நடக்கவில்லையா? சரி, ஆழ்துளை கிணறு விபத்து சம்பவங்களுக்கு ஏன் சமவெளி கிணறுகளுக்கும் கட்டுப்பாடுகள் வருகிறது? எல்லாம் நடந்தது, ஆனால் முன்னர் மீடியாவில் வரவில்லை. தற்காலத்தில் போன ஒன்றிரண்டு வருஷமாக இவ்விபத்து சம்பவங்கள் மீடியாவில் தொடர்ந்து காட்டப்பட்டு வந்ததன் காரணம் இதுபோன்ற சட்டங்களை கொண்டுவரத்தான். குழந்தைகள் மேல் அக்கரை என்றால் அதை கட்டுப்படுத்த எளிய-கட்டுப்பாடுகள் ஏராளம் உண்டு. அதை விடுத்து விவசாயத்தை, பொதுமக்களின் நீர் உரிமையை பாதிக்கும் இதுபோன்ற சட்டங்கள் மிகவும் தவறு. இது புதிய தேசிய நீர்க் கொள்கையின் படி தண்ணீரை வணிகப்பொருளாக்கும் சூழ்ச்சியினை நோக்கி வைக்கும் சிறு சிறு அடிகள். இந்த நீர் கொள்கையை நம் தலைமீது திணித்த உலக வங்கிக்கும் அதற்கு தலையாட்டிய மத்திய அரசுக்கும் நன்றிகள். பொறுத்திருந்து பாருங்க, தண்ணிய எடுக்க, அதை சுத்தப்படுத்த, அதை விநியோகிக்க, இவை அனைத்தையும் நிர்வகிக்க என அனைத்தும் தனியார் வசம் சென்று தண்ணீருக்கு பணம் பணம் என்று பறக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

2.       ஒட்டர்கள், போயர்கள் போன்ற எளிய மக்கள் குழுக்கள் தான் சமவெளி கிணறு தோண்டும் வேலையை செய்து வருகிறார்கள். இனி அவர்களின் தொழிலுக்கு ஒரு இடைஞ்சலை ஏற்படுத்தியாகி விட்டது. அமைப்புசாரா தொழிலாக இருந்த கிணறு தோண்டும் பணி இனி மைய நிர்வாக அமைப்பை உருவாக்கும் உந்துதலுக்கு ஆட்படும். அதை எளிதாக அதிகாரபுள்ளிகள் சுவீகரித்துக் கொள்ளும்.

3.       நான்கு நாட்கள் முன்னர்தான் ரிக் சங்க தேர்தல் நடந்து முடிந்தது. அங்கே இருந்து 'கணிசமான கவனிப்பை' எதிர்பார்த்து இந்த சட்ட திருத்தம் என்னும் தொழில் அச்சுறுத்தல் வந்திருக்கலாம். இனி உக்கார்ந்த இடத்தில் பிச்சை வந்து விழும். நாள் கொங்கதேச பகுதி அரசியல்வாதிகள் செயல்பாடு என்ன என்பதை இங்கே நாம் கவனிக்க வேண்டும்.





இதற்குத் தான் நம்ம முன்னோர்கள் சொன்னபடி ஒவ்வொரு கிராமத்திலும் ஏரி-குளங்கள் அதன் வாய்க்கால்கள் சரிவர பராமரித்து, ஊர் எல்லைகள் முழுக்க ஆல், அரசு, இச்சி, அத்தி, வேம்பு போன்ற மரங்களை வளர்த்து மழையை ஈர்க்க செய்யவேண்டும் என்பது. இதுதான் நிரந்தர தீர்வு. இதற்கு மட்டுமல்ல, விவசாயம் உட்பட அனைத்து கிராம பிரச்சனைகளையும் அணுக கிராமம் சார்ந்த பாரம்பரிய பஞ்சாயத்து அமைப்புகள் வலுவுடன் வேண்டும். காப் பஞ்சாயத்து போன்ற பஞ்சாயத்து அமைப்புகள் வலுவுடன் இருக்கும் மாநிலங்களில் இதுபோன்ற எந்தவொரு கிராம விரோத-மக்கள் விரோத சட்டங்கள் வந்தாலும் அதை மிக எளிதாக புறக்கணிக்கச் செய்யும் அதிகாரம் அங்கு கிராமங்களுக்கு உள்ளது. அதுபோன்ற அமைப்புகளை தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக்கி கிராமங்களை இந்த பஞ்சாயத்து அமைப்புகள் மூலம் ஒருங்கிணைக்க வேண்டும்.

தேசிய நீர் கொள்கை பற்றி: http://www.tamilhindu.com/2012/03/on-upa-govt-national-water-policy/

காப் பஞ்சாயத்து பற்றி: http://www.karikkuruvi.com/2014/05/blog-post.html

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates